TikTok அறிமுகம் செய்யும் புதிய அம்சத்தால் இவர்கள் சிக்கப்போகிறார்கள்
டிக்டாக் விரைவில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுவரை இருக்கும் சமூக ஊடகங்களில் உங்கள் புரொபைலை யார் பார்த்தார்கள்? என்று பார்க்க முடியுமா. அப்படியான அம்சங்களை எந்த சமூகவலைதள நிறுவனமும் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், இதில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது டிக்டாக். அது என்னவென்றால், உங்கள் புரோபைலை யார் பார்த்தார்கள் என்ற விவரத்தை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல், நீங்கள் யார் புரோபைலை பார்த்தீர்கள் என்ற தகவலும், நீங்கள் பார்த்த புரோபைல் நபருக்கு தெரியும்.
மேலும்படிக்க | Redmi 10A Launch: ரூ.10,000-க்கும் குறைவான விலை, அசத்தும் அம்சங்கள், அறிமுக தேதி இதோ
இது ஒருவகையில் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. யாரெல்லாம் நம்மை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில் யூசரின் பிரைவைசிக்கு ஆபத்தானதாகவும் இருக்கும் என விமர்சனம் எழுந்துள்ளது. இதுவரை டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் கூட இந்த அம்சத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி யோசிக்கவில்லை. டிக்டாக் இந்த அம்சத்தை கொண்டு வருவது, தனிநபர்களின் தனியுரிமைக் கொள்கைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
நீங்கள் விரும்பினால் இதனை முடக்கி வைக்கலாம் அல்லது ஆன் செய்து வைத்திருக்கலாம். அதேநேரத்தில் அனைத்து யூசர்களையும் டிக்டாக் காண்பிக்காது. கடைசி 30 நாட்களில் அதிகமுறை உங்கள் டிக்டாக் பக்கத்துக்கு வந்தவர்களை மட்டுமே காண்பிக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான முழு விவரமும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். டிக்டாக்கைப் பொறுத்தவரை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக சீன செயலிகளை அதிரடியாக மத்திய அரசு தடை செய்துள்ளது. பல்வேறு வழிகளில் இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்தபோதும், மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
மேலும் படிக்க | Tips and Tricks: மின்சார வாகனத்தின் பேட்டரியை பராமரிக்க டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR