Redmi 10A Launch: ரூ.10,000-க்கும் குறைவான விலை, அசத்தும் அம்சங்கள், அறிமுக தேதி இதோ

Redmi 10A Launch Date India: ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் Xiaomi இன் துணை பிராண்டான Redmi அதன் மலிவான ஸ்மார்ட்போனான Redmi 10A ஐ 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக அறிமுகப்படுத்த உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 15, 2022, 11:49 AM IST
  • Redmi 10A அறிமுகம் ஆகவுள்ளது.
  • ஏப்ரல் 20 அன்று போன் அறிமுகம் ஆகலாம் என தகவல்.
  • இதன் விலை ரூ.10,000-க்கும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
Redmi 10A Launch: ரூ.10,000-க்கும் குறைவான விலை, அசத்தும் அம்சங்கள், அறிமுக தேதி இதோ title=

ரெட்மி 10ஏ இந்திய வெளியீட்டு தேதி அமேசானில் உறுதிப்படுத்தப்பட்டது: சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரெட்மி விரைவில் சந்தையில் ரெட்மி 10ஏ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போனின் விலை குறித்து பல நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

எனினும், தற்போது ரெட்மி வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது. இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் எப்போது வெளியிடப்படுகிறது, இதன் விலை எவ்வளவு மற்றும் அதில் என்னென்ன அம்சங்களைப் பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 

ரெட்மி 10ஏ வெளியீட்டு தேதி

ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போன் பற்றி அமேசான் இந்தியாவின் இணையதளத்தில் சில விவரங்கள் கசிந்துள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 20 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பிளிப்கார்டில் அதிரடி சலுகை: Redmi Note 10G போனின் விலை வெறும் ரூ. 1500 

ரெட்மி 10ஏ விலை

ரெட்மி 10ஏ-இன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் பல கசிவுகள் இது பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. சமீபத்திய கசிவுகளின்படி, இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 699 யுவான் ஆகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 8,300 ரூபாய்.

ரெட்மி 10ஏ கேமரா

இந்தியாவில் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் என்ன அம்சங்கள் இருக்கும் என்பது பற்றி அதிக தகவல்கள் இல்லை. ஆனால் இந்த மாடலின் அம்சங்களை சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 10ஏ-இன் அம்சங்களிலிருந்து மதிப்பிடலாம். கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி இமேஜ் சென்சார் கிடைக்கும். இது சியோமியின் எஐ கேமரா 5.0 க்கான ஆதரவுடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ரெட்மி 10ஏ-வில் 5எம்பி சென்சார் கிடைக்கும்.

ரெட்மி 10ஏ மற்ற விவரக்குறிப்புகள்

மீதமுள்ள அம்சங்களைப் பற்றி பேசுகையில், ரெட்மி 10ஏ-ல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை சேமிப்பகத்தைப் பெறலாம். 6.53 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, 720 x 1,600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 20: 9 என்ற விகிதத்துடன், இந்த ஃபோனில் 5,000mAh பேட்டரி மற்றும் 10வாட் நிலையான சார்ஜிங் ஆதரவைப் பெறுவீர்கள். இதில் கொடுக்கப்பட்டுள்ள மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் 512ஜிபி வரை சேமிப்பை அதிகரிக்கலாம். இந்த போனில் 3.5mm ஹெட்போன் ஜாக் கொடுக்கப்படலாம்.

இந்த புதிய மற்றும் மலிவான ஸ்மார்ட்போனான ரெட்மி 10ஏ-இன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை ரெட்மி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஐபோனின் 13 மாடல் போன் உற்பத்தி சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியது 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News