தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டது, இந்த முறை எளிமையானதாக மாறிவிட்டது.  மேலும் இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் பேமெண்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  வாட்ஸ் அப் அதிகமான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுவதால் பல வங்கிகளும் இந்த தளங்களில் தனது பேமெண்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதில் சமீபத்தில் ஏர்டெல் பேமெண்ட் வங்கி அதன் சேவையை சேர்த்துள்ளது, தற்போது இந்த சேவையை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Truecaller; இந்த வசதி நிறுத்தப்படும்


வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட் நம்பரான 8800688006 என்கிற என்னை உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேமித்து வைக்க வேண்டும்.  இந்த என்னை சேமித்த பிறகு நீங்கள் இந்த எண்ணிற்கு 'ஹாய்' என்று மெசஜ் அனுப்பவேண்டும்.  மற்ற ஆப்ஸ்களை விட வாட்ஸ் அப் பலவிதமான நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.  இதில் 24×7 வங்கி வசதிகள், விடுமுறை நாட்களிலும் கூட இதனை பயன்படுத்தும் வசதி மேலும் முக்கியமானதாக, இது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைப் பயன்படுத்துவதால், நமது தகவல்கள் பிறரிடம் செல்லாமல் பாதுகாப்பானதாக உள்ளது என்று ஏர்டெல் உறுதியளித்துள்ளது.


மேலும் வாட்ஸ் அப்பில் கூடுதலாக உங்கள் வங்கி கணக்கின் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம், வாடிக்கையாளர்கள் இதில் பரிசு அட்டைகள் மற்றும் டிஜிட்டல் தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம், இதில் ஃபாஸ்ட்டேக் அக்கவுண்டின் தகவல்களை தெரிந்துகொள்ளலாம், உடனடி கடன்களை பெற்றுக்கொள்ளலாம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் மற்றும் இதர கட்டணங்களை செலுத்தும் பலவித அம்சங்களை இது வழங்குகிறது.  ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் அறிக்கைபடி, அனைத்து மெசேஜ்களும் எண்டு -டூ-எண்டு என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன, அதனால் வாடிக்கையாளர்களின் கணக்குத் தகவல் யாருடனும் பகிரப்படாமல் பாதுக்காப்பாக உள்ளது.  மேலும் வாட்ஸ்அப்பில் எவ்வித பின் நபரும் போட தேவையில்லை, அதோடு ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தவேண்டியதுமில்லை.


மேலும் படிக்க | 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன் வாங்க நீங்க ரெடியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR