ஒரே சிம்கார்டில் இரண்டு எண்கள் பயன்படுத்துவது எப்படி? ஸ்மார்ட்போன் டிரிக்ஸ்
ஒரே சிம்கார்டில் இரண்டு எண்களை, டெக்னாலஜி உதவியுடன் பயன்படுத்தலாம்.
சிம் கார்டில் ஒரே ஒரு எண்ணை மட்டுமே இயக்க முடியும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரே சிம் கார்டில் இரண்டு ஃபோன் எண்களைப் பயன்படுத்த முடியும். அது எப்படி சாத்தியம்? என கேட்கிறீர்களா?. அந்த தந்திரத்தை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
சிம் கார்டில் இரண்டு எண்கள்
ஒரே சிம் கார்டில் இரண்டு எண்களை எவ்வாறு இயக்குவது? என்று யோசிக்கும் உங்களிடம் முதலில் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். பட்டன் போன்கள் வைத்திருப்பவர்களுக்கு இந்த தந்திரம் உதவாது. ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், டேட்டா ரீச்சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு ஒரு செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | மலிவான அசத்தல் Maruti கார்களை வாங்கணுமா? வருகிறது சூப்பர் சான்ஸ்
ஆண்டிராய்டு செயலி
உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 'Text Me: Second Phone Number' என்ற செயலியை பதிவிறக்கவும். இதற்குப் பிறகு, உங்கள் ஜிமெயில் கணக்கின் உதவியுடன், இந்த செயலியில் பதிவு செய்து உங்களுக்கான தனி கணக்கை உருவாக்கவும். இதனை முடித்த பிறகு, செயலியின் கீழே கொடுக்கப்பட்டுள்ளா ஆப்சன்ஸ் என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் நம்பர்ஸ் என்ற ஆப்சன் காட்டும். அதனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்களுக்கான இரண்டாவது எண்
அங்கிருக்கும் எந்த மொபைல் எண்ணை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனால், நீங்கள் தேர்வு செய்த மொபைல் எண்ணுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே வெளிநாடுகளைச் சேர்ந்த எண்கள் கிடைக்கும். சந்தாதாரராக மாறுபவர்களுக்கு சில இலவச ஆப்சன்களும் இருக்கின்றன. அந்த எண்ணை பெற்று நீங்கள் அழைக்கும்போது, நீங்கள் தான் அழைக்கிறீர்கள் என மற்றவர்களுக்கு தெரியாது.
மேலும் படிக்க | IPL 2022 Live ஸ்ட்ரீமிங் இலவசமா பார்க்கணுமா? இதை செய்தால் போதும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR