அதிகளவில் பிரபலமாகவும், பலராலும் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ் அப் ஆனது அதன் பயனர்களை கவரும் பொருட்டு பல்வேறு விதமான சிறப்பான அம்சங்களை வழங்கி வருகிறது.  இந்த பிரபலமான மெசேஜிங் ஆப் தற்போது பல போன்கள் அல்லது டேப்லெட்டில் வாட்ஸ் அப் அக்கவுண்டை பயன்படுத்தி மெசேஜ் செய்யும்படியான அம்சத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.  வாபீட்டாஇன்ஃபோ தளத்தின் பீட்டா வெர்ஷனில் காணப்படும் ஸ்க்ரீன் ஆனது, QR கோடை உங்கள் போனில் ஸ்கேன் செய்வதன் மூலம், நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தை 'கம்பேனியன்' ஆக செய்வதற்கான அனுமதியை வழங்குகிறது, இருப்பினும் ஸ்கேன் செய்ய சரியான குறியீடு தற்போது இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | வாட்ஸ்அப் பேமண்ட்டில் கேஷ்பேக் பெறுவது எப்படி?


முன்னர் பீட்டா வெர்ஷனில் காணப்பட்ட ஸ்க்ரீன் எண்டு டூ எண்டு என்க்ரிப்ட் செய்யப்பட்டு சமீபத்திய மெஸேஜ்களை ஒத்திசைவு செய்கின்றன.  அந்த ஸ்க்ரீனில் 'ரிஜிஸ்டர் டிவைஸ் அஸ் கம்பேனியன்' என்கிற ஸ்க்ரீனும் இணைந்து மாற்றொரு டிவைஸில் வாட்ஸ்அப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது.  இந்த இரண்டு ஸ்க்ரீன்களும் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.  இதன் மூலம் மற்றொரு போனில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி மெசேஜ் செய்யமுடியும் என்பது நிரூபணமாகிறது.



ஆனால் இந்த அம்சம் ஐஓஎஸ்-ல் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, இருப்பினும் இந்த பயன்பாடு விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.  வெளியான தகவல்களின்படி, அந்த ஸ்க்ரீன் 'ரிஜிஸ்டர் டிவைஸ் அஸ் கம்பேனியன்' ஸ்க்ரீனுடன் இணைந்து மற்றொரு போனில் வாட்ஸ் அப்பை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த வழிக்காட்டுதல்களை காண்பிக்கிறது.  இந்த பயன்பாடு செயல்பாட்டில் தான் உள்ளது என்பதற்கான ஆதாரங்களும் சேமிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறப்போரிங்களா? இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR