பிரபல கணினி உற்பத்தி நிறுவனமான HP தனது பிரீமியம் போர்ட்டை விரிவிக்கும் வகையில் AMD Ryzen செயலி மூலம் இயங்கும் HP ENVY x360-னை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

AMD Ryzen R3 செயலி மூலம் இயங்கும் HP ENVY x360 ஆனது வரும் நவம்பர் மாதம் முதல் இந்திய விற்பனை சந்தையில் கிடைக்கும். இரண்டு வகைப்பாட்டில் வரும் இந்த கணினி ரூ. 60,990 மற்றும் ரூ 74,990(256GB சேமிப்பு திறன்) விலையில் கிடைக்கும் என HP  தெரிவித்துள்ளது.


"பயனர்கள் விரும்பும் PC அனுபவங்களை வழங்க ஏதுவாக இந்த HP ENVY x360 வடிவமைக்கப் பட்டுள்ளது. இதற்கு இக்கணினியின் நுண்ணறிவு-இயங்குதளம், உகந்த செயல்திறன் மற்றும் தரம் ஆகியவை உதவும் என நாங்கள் நம்புகிறோம் என்று HP நிறுவனத்தின் மூத்த இயக்குநர் விக்ரம் பேடி தெரிவித்துள்ளார்.


அடுத்தமாதம் விற்பனை சந்தைக்கை வரவுள்ள இந்த கணினி ஆனது மாற்றத்தக்க அனைத்து அம்சங்களை கொண்டுள்ளது, HP இயந்திர பயனர்கள் கொடுத்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த கணினி செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விசிறி சத்தம் குறைப்பு, நெடுநேர பயன்பாட்டின் போது ஏற்படும் வெப்பநிலையை கட்டுப்படுத்து கூல்சென்ஸ் தொழில்நுட்பம் என பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.


திரைப்படம், மியூசிக் மற்றும் கேமிங்கிற்கான ஸ்ட்ரீமிங் பயன்பாடுகள் தேவைப்படும் வேகமான இணைய இணைப்புகளை வழங்குவதற்கு சாதனமான Gigabit Wi-Fi அம்சமும் இக்கணினியில் சேர்க்கப்பட்டுள்ளது.


டமாஸ்கஸ் அமைப்பைக் கொண்டிருக்கும் கையால் வடிவமைக்கப்பட்ட துண்டுகளிலிருந்து மடிக்கணினியின் தனித்துவமான வடிவமைப்பு பயனரின் ஆர்வத்தை தூண்டும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


AMD Ryzen செயலி சுமார் 12.5 மணி நேரம் பேட்டரி ஆயுள் செயல்திறன் கொண்டிருக்கும் எனவும், 0% பேட்டரி ஆயுள் சக்தியில் இருந்து 50% வரையிலான சார்ஜிங்கிற்கு வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது!