Huawei-ன் Mate 20 Pro இந்தியாவில் அறிமுகமானது; விலை ₹ 69,990!
சீனாவை மையமாக கொண்டு இயங்கும் பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான Huawei தனது புதுவரவான Mate 20 Pro-வினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!
சீனாவை மையமாக கொண்டு இயங்கும் பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான Huawei தனது புதுவரவான Mate 20 Pro-வினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!
இணைய வினியோக இயந்திர உற்பத்தியில் பிரசித்திப்பெற்ற Huawei நிறுவனம் தற்போது Mate 20 Pro-வினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த போனின் விலையானது ₹ 69,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த Huawei Mate 20 Pro, அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Huawei Mate 20 Pro ஆனது இந்நிறுவனத்தின் முதல் 5G-ready 7nm Kirin 980 chipset தொழில்நுட்ப போன் ஆகும். அதே வேலையில் இந்தியாவில் Mate வரிசையில் Huawei வெளியிடும் முதல் போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Huawei Mate 20 Pro குறித்து சில குறிப்புகள்...
மூன்று பின் கேமிரா (40MP wide-angle lens, 20MP ultra-wide angle lens, 8MP telephoto lens)
ஒரு முன் கேமிரா (24MP)
6GB RAM மற்றும் 128GB உள் நினைவகம்.
4200mAh பேட்டரி.
Android 9.0 Pie இயங்குதளம்.
எமரால்டு பச்சை மற்றும் ட்விலைட் ஆகிய இரு வண்ணங்களில் வெளியாகிறது.