புதுடெல்லி: அமெரிக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் (Apple) ஸ்மார்ட்போனுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்த நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போன்களான ஐபோன்கள் இன்று உலகில் அதிகம் விற்பனையாகும் போன்களில் ஒன்றாகும். ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் தனது ஐபோனின் புதிய மாடலைக் கொண்டுவருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 13 ஐ (iPhone 13) அறிமுகப்படுத்தியது. ஆனால் இதன் விலை சாற்றி உயர்வே. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி நீங்கள் அற்புதமான ஐபோன் (iPhones) வாங்க விரும்பினால், Amazon இல் iPhone 12 Pro ஐ வாங்கலாம். இதில் நீங்கள் ஏராளமான அற்புதமான சலுகையைப் பெற முடியும். எப்படி என்று இங்கே விரிவாக காண்போம். 


ALSO READ | iPhone 13 பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: அதிரடி முடிவெடுத்தது ஆப்பிள் நிறுவனம்


iPhone 12 Pro இல் பெரிய தள்ளுபடிகளைப் பெறுங்கள்
இந்த ஒப்பந்தத்தில், iPhone 12 Pro இன் 128 ஜிபி மாறுபாட்டைப் பற்றி காண உள்ளோம். இதன் ஒரிஜினல் விலை ரூ.1,19,900 ஆகும். அமேசானில், இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனில் நீங்கள் 21% தள்ளுபடியைப் பெறுகிறீர்கள், இதன் காரணமாக இந்த தொலைபேசியில் 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம். அதன்படி தள்ளுபடிக்குப் பிறகு, ஐபோன் 12 ப்ரோவை ரூ.94,900க்கு வாங்கலாம்.


இந்த ஒப்பந்தத்தில் அதிக சலுகைகள் கிடைக்கும்
இது மட்டுமின்றி, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக ஐபோன் 12 ப்ரோவை வாங்கினால், ரூ.14,900 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெற்ற பிறகு, இந்த போனின் விலை உங்களுக்கு 80 ஆயிரம் ரூபாயாக இருக்கும். நீங்கள் விரும்பினால், நோ-காஸ்ட் EMIயிலும் வாங்கலாம்.


iPhone 12 Pro இன் அம்சங்கள்
அம்சங்களைப் பற்றி பேசுகையில், iPhone 12 Pro 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே மற்றும் செராமிக் ஷீல்ட் பூச்சுடன் வருகிறது. A14 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் நீங்கள் 12MP அல்ட்ரா-வைட், வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள், 4x ஆப்டிகல் ஜூம் ரேஞ்ச் மற்றும் டீப் ஃப்யூஷன், நைட் மோட் மற்றும் ஸ்மார்ட் HDR3 போன்ற பல புகைப்பட முறைகளையும் பெறுவீர்கள். இந்த போனின் முன்பக்க கேமராவும் 12MP மற்றும் IP68 மதிப்பீட்டில் வருகிறது. 


அமேசானில் iPhone 12 இன் பிற மாடல்களிலும் தள்ளுபடிகளைப் பெறுகிறீர்கள். குறுகிய காலத்திற்கு மட்டுமே, இந்தச் சலுகைகளைப் பெற நீங்கள் உடனடியாக Amazonஐப் பார்வையிட வேண்டும்.


ALSO READ | iPhone-ஐ மிஞ்சும் அம்சம், அசத்தும் Oppo போன்: விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR