Samsung Big Battery Smartphones: ஆரம்ப காலகட்டத்தில் மொபைல ஃபோனை பயன்படுத்தும்போது, அதாவது பட்டன் வைத்த அடிப்படை ஃபோனில் சார்ஜ் என்பது வாரத்திற்கு இரண்டு முறை அல்லது வாரத்திற்கு மூன்று முறை செய்யப்படுவதே வழக்கமாக இருந்தது. திருநெல்வேலியில் இருந்து ஒருவர் மதுரைக்கு செல்கிறார் என்றால், சார்ஜரை அப்போது கையில் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியமில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இப்போது அப்படியில்லை. பக்கத்தில் ஒரு பத்து கிலோமீட்டர் வட்டத்திற்குள் சென்றாலே, எதற்கும் கையில் சார்ஜரை வைத்துக்கொள்வோம் என்றளவிற்கு நிலை மாறிவிட்டது. காரணம், ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் சார்ஜ் வேகமாக இறங்குவது வாடிக்கைதான். மொபைல் பேட்டரியின் திறனை பொறுத்து சார்ஜ் நிற்கும் நேரம் வேறுபடலாம் என்றாலும், அது நீண்ட நேரத்திற்கு நீடிப்பது நீங்கள் பயன்படுத்துவதை பொறுத்துதான். 


எனவே தற்போது மொபைல் வாங்கும் அனைவரும் பேட்டரியின் திறன், சார்ஜ் ஏறும் வேகம் உள்ளிட்ட அம்சங்களை பார்த்துதான் வாங்குகிறார்கள். பலருக்கும் பேட்டரி குறித்து பெரிய கவனம் இல்லாவிட்டாலும், பேட்டரியை பார்த்து மொபைல் வாங்குவோர் எண்ணிக்கையும் தற்போதைய சூழலில் அதிகமாக உள்ளது. நீண்ட தூரம் அடிக்கடி பயணம் செய்ய விரும்புவோர் இதுபோன்ற மொபைலை வாங்கவே விரும்புகின்றனர். 


மேலும் படிக்க | பிளிப்கார்டில் Vivo V30... அடுக்கி நிற்கும் சிறப்பம்சங்கள் - விலை என்னவாக இருக்கும்?


அந்த வகையில், பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அதிக mAh உள்ள மொபைல்களை தயாரிக்கின்றன. குறிப்பாக, சாம்சங் உள்ளிட்ட மொபைல்கள் எப்போதும் பேட்டரிக்கு பெயர் பெற்றவை எனலாம். அதிக நேரம் சார்ஜ் நிற்கும் மொபைல்களாக சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் அறியப்படுகின்றன. இந்நிலையில், சமீபத்தில் அறிமுகமான 5ஜி மாடல்களில் அதிக பேட்டரி திறன் கொண்ட மொபைல்கள் குறித்து இங்கு காணலாம். 


Samsung Galaxy M14 5G


இந்த மொபைலின் முக்கிய அம்சமே, 6000mAh பெரிய பேட்டரி இருப்பதுதான். இந்த மொபைல் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் Exynos 1330 பிராஸஸர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 


மூன்று கேமரா அமைப்பு இந்த மொபைலில் உள்ளது. 50MP+2MP+2MP என மூன்று பின்புற கேமரா உள்ளது. மேலும்,  13MP முன்பக்க செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் இருந்து 9,990 ரூபாய்க்கு வாங்கலாம். 


Samsung Galaxy M34 5G


இந்த மொபைல் 6000mAh வலுவான பெரிய பேட்டரி உடன் வருகிறது. இந்த மொபைலில் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் Exynos 1280 பிராஸஸர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி RAM, 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.


புகைப்படம் எடுப்பதற்கு, தொலைபேசியில் 50MP முதன்மை கேமரா உள்ளது. இதனுடன், 8MP இரண்டாம் நிலை மற்றும் 2MP மூன்றாவது கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 13எம்பி முன்பக்க கேமரா உள்ளது. இந்த மொபலை அமேசானில் இருந்து 15,999 ரூபாய்க்கு வாங்கலாம். 


Samsung Galaxy M13


இந்த மொபைலின் முக்கிய அம்சமும் 6000mAh பெரிய பேட்டரிதான். இந்த மொபைலில், 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் Exynos 850 பிராஸஸர் உள்ளது. 


மூன்று கேமரா அமைப்பு உள்ள இந்த மொபைலில், 50MP+5MP+2MP ஆகிய பின்புற கேமராக்கள் உள்ளன. மேலும், முன்புறத்தில்  8MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த மொபைல் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் இருந்து 9,999 ரூபாய்க்கு வாங்கலாம். 


மேலும் படிக்க | டாப் 5 சிறந்த ஸ்டைலான மற்றும் மைலேஜ் தரும் பைக் மாடல்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ