இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டன. ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பார்ப்பது மிக அரிது. அந்த வகையில் எளிய மக்களும், வாங்க நினைக்கும் பிரீமியம் ஃபோன்களில் ஒன்று ஒன் பிளஸ் போன்கள். சிறந்த மிட்ரேன்ஞ் போன்களாக இது பலர் வாங்க நினைக்கும் போன் என்றால் மிகையில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் OnePlus Nord 4 5G  போனை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல சான்ஸ் கிடைத்துள்ளது, தற்போது Amazon தளத்தில் சிறந்த சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தற்போது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை  ரூ. 7,000 வரை தள்ளுபடியுடன் மலிவான விலையில் வாங்கலாம். மேலும் இதில் வங்கிச் சலுகைகளும் கிடைக்கும். இந்நிலையில், அதன் விலை மற்றும் கிடைக்கும் அனைத்து சலுகைகள் பற்றிய விவரங்களையும் உங்களுக்கு கூறுவோம்.


OnePlus Nord 4 சலுகை மற்றும் புதிய விலை


OnePlus Nord 4 5G இன் 8 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் அமேசானில் ரூ. 29,998 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது அதன் வெளியீட்டு விலையான ரூ. 32,999 ஐ விட மிகக் குறைவு. இது தவிர, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ.4,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் போனின் விலை ரூ.25,998 ஆக குறையும்.


மேலும் படிக்க |  Amazon Fab Fest Sale 2025: OnePlus 13 ஸ்மார்ட்போனை மிக மலிவான விலையில் வாங்க அற்புதமான வாய்ப்பு


OnePlus Nord 4 அம்சங்கள்


OnePlus Nord 4 இல், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.74 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கிடைக்கும். இந்த ஃபோன்  செயல்திறன் அதிகம் கொடண்ட, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 செயலி உள்ளது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 14.1  ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.


கேமிரா மற்றும் பேட்டரி திறன்


புகைப்படம் எடுப்பதற்கு, இந்த ஃபோனில் OIS மற்றும் EIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் சோனி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. அதேசமயம், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. இந்த சாதனத்தை இயக்க, நிறுவனம் 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை வழங்கியுள்ளது.


மேலும் படிக்க |  ஏர்டெல் ரூ.499 ரீசார்ஜ் திட்டம்... கூடுதல் 25GB டேட்டா உடன் OTT பலன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ