Yearender Top Youtube India Searches 2023: கூகுள் நிறுவனம் தனது தேடல் தளத்தில் டாப் தேடல்களை சமீபத்தில் அறிவித்தது. அதன் அதிகாரப்பூர்வ வலைப்பதிவின் படி, ChatGPT, சந்திரயான்-3 ஆகியவை அதிகம் தேடப்பட்ட விஷயங்களாகும். கியாரா அத்வானி மற்றும் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் ஆகியவையும் அதிக முறை தேடப்பட்டவையாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பட்டியலில், இந்தியாவின் சந்திரயான்-3 மிஷனின் சாஃப்ட் லேண்டிங் வீடியோ முதன்மையாக உள்ளது. சந்திரயான்-3 திட்டம் இந்தியாவின் மூன்றாவது சந்திரப் பயணமாகும், இந்த பயணத்தின் மூலம் இந்தியா நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது.


சந்திரயான்-3 (Chandrayaan-3) மிஷன் மென்மையான தரையிறக்கத்தின் நேரடி ஒளிபரப்பை 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யூ-ட்யூப்பில் பார்த்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் நேரடி ஒளிபரப்பில் அதிகமானோர் பார்த்த வீடியோ இதுதான். மேலும், இந்தியர்கள் யூ-ட்யூப்பில் அதிகம் தேடிய விஷயங்கள் என்னவென்று தொடர்ந்து காணலாம்.


மேலும் படிக்க | இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனை..! முதன்முறையாக பதிவான சூரியனின் முழு படம்


2023ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான வீடியோ Round2Hell சேனலில் மென் ஆன் மிஷன் (MOM) ஆகும். இந்த வீடியோ கேமிங் சேனலால் செய்யப்பட்டது. இரண்டாவது மிகவும் பிரபலமான வீடியோ அனுபவ் சிங் பாசியின் UPSC ஸ்டாண்ட்-அப் காமெடி வீடியோவாகும். மூன்றாவது மிகவும் பிரபலமான வீடியோ CarryMinati சேனலின் Daily Vloggers parody ஆகும். இந்த வீடியோ மற்ற யூ-ட்யூப் vlogger நபர்களை பகடி செய்யும் வகையில் அமைந்திருக்கும்.


யூ-ட்யூப்பின் கூற்றுப்படி, கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (GTA) VI டிரெய்லர் 1 இந்தியாவில் 93 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன், இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட இசை அல்லாத வீடியோவாக மாறியது. இந்த ஆண்டின் சிறந்த 10 இந்திய படைப்பாளிகளின் பட்டியலையும் யூடியூபர் வெளியிட்டது. இதில் பவன் சாஹு (Pawan Sahu), நீது பிஷ்ட் (Neetu Bisht), ஃபிலிமி சூரஜ் ஆக்டர் (Filmi Suraj Actor), அமன் டான்சர் ரியல் (Aman Dancer Real), Cute.Shivani.05. ஆகியோர் முதன்மையானவர்களாக இடம்பெற்றுள்ளனர். 


மேலும், மியூசிக் வீடியோக்கள் மற்றும் டிரெண்டான Shorts வீடியோக்களில் தேரே வாஸ்தே, பல்சர் பைக், ஜெயிலர், கார்ப்பரேஷன், நா ரெடி (லியோ) மற்றும் ஹீரியே போன்றவற்றின் வீச்சு பெரும் உச்சத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. யூ-ட்யூப் தற்போது குடும்பங்கள் கொண்டாடும் தளமாக மாறிவிட்டது எனலாம். சீரியலில் மூழ்கியிருந்த இல்லத்தரசிகள் தங்களுக்கு தேவையான விஷயங்களை தெரிந்துகொள்ளவும், புது புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும் யூ-ட்யூபை பயன்படுத்துகின்றனர்


மேலும் படிக்க | மக்களே முந்துங்கள்... இன்னும் 2 நாள்களில் ஆப்பர் முடியுது - டாப் மொபைல்கள் தள்ளுபடியில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ