ஜியோ ஜிகா பைபர் எனும் இணைய சேவை மூலம் 2020-க்குள் இந்தியாவில் அனைவரும் 4ஜி அதிவேக இணைய சேவையை பயன்படுத்துவார்கள் என முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் இன்று நாட்டில் உள்ள அனைத்து செல்போன் தொலைதொடர்பு நிறுவனங்களும் பங்கேற்கும் "இந்திய மொபைல் நிறுவனங்களின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற உள்ளது. இந்த மாநாட்டின் முதல் நாளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தில் தலைவர் சுனில் மிட்டல் கலந்துக்கொண்டு பேசினார்.


 



இந்திய மொபைல் நிறுவனங்களின் மாநாட்டில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியது, ஜியோவின் ஃபைபர் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவை மூலம், அதிவேக இணைய சேவை பெரும் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பெரும். மொபைல் இணைய சேவையில் உலகின் முதலிடத்தில் இந்தியாவை கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். ஆனால் தற்போது இந்தியா 135வது இடத்தில் உள்ளது எனக் கூறினார். 


ஜியோ ஜிகா ஃபிபர் மூலம் வீட்டுக்கு வெளியில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் கிடைக்கும், வீட்டுக்குள் இருந்தால் வைபை (WiFi) வசதி கிடைக்கும். மேலும் மொபைல் டேட்டா பயன்பாடு குறையும். ஜியோவின் ஜிகா ஃபைபர் மூலம் அதிவேக இணையசேவை பெறலாம். தற்போது அதிவேக இணைய சேவை பெற்று வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெரும் எனவும் கூறினார்.


 



2016 ஆம் ஆண்டில் மலிவான விலையில் மொபைல் தரவோடு இலவச குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வழங்கிய ஜியோ தொலைத் தொடர்புத் துறையில் பெரும் புரச்சியை ஏற்ப்படுத்தியது. இதன்மூலம் தற்போது மொபைல் இண்டர்நெட் தரவரிசையில் மிக அதிகமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது. 


மொபைல் இணைய சேவை அடுத்து, இப்போது ஜியோ ஜிகா பைபர் எனும் கேபிள்களை அடிப்படையாக ஒரு பிராட்பேண்ட் சேவை செயல்படுத்தும் நோக்கில் இறங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.