கூகுள் மேப்ஸ் - கூகுள் எர்த் மூலம் நமக்கு வரைபடங்கள் வழங்கி, நமக்கு பாதைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கி வழிசெலுத்தி புவிசார் சேவைகளை (maps, navigation and geospatial services) வழங்கி வருகிறது.
இந்நிலையில், மோடியின் கனவான தற்சார்பு இந்தியாவை நோக்கிய மற்றோரு முக்கிய நடவடிக்கையாக, கூகுள் மேப், கூகுள் எர்த் பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறுகிறது ISRO-MapmyIndia. இனி நமக்கு கூகிளை சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியர்களுக்கு இந்த சேவையை தரும் வகையில், மேப் மை இண்டியாவும் (MapmyIndia) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO நிறுவனத்துடன் கை கோர்த்து, இந்த  புதிய சேவையை வழங்கும். 


"You don't need Goo*le Maps/Earth any longer", அதாவது, கூகுள் மேப்ஸ் - கூகுள் எர்த் (Google Maps, Google Earth) ஆகியவற்றை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று, என்று மேப் மை இண்டியாவின் தலைவர் ரோஹன் வர்மா (Rohan Verma) தன் லிங்க்டின் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 


வரைபடங்கள் மற்றும் புவியியல் சேவைகளை உள்நாட்டு நிறுவனம் வழங்குவது அனைத்து வகையிலும் சிறந்ததாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன என்று வர்மா கூறினார். "மேப்மைஇந்தியா, உள்ளூர், இந்திய நிறுவனமாக இருப்பதால், அதன் வரைபடங்கள் நாட்டின் உண்மையான இறையாண்மையை பிரதிபலிப்பதையும், தரவு பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது, இந்திய அரசு தகவல்களின் அடிப்படையில் இந்திய எல்லைகளை சித்தரிக்கிறது" என்று அவர் கூறினார்.


இஸ்ரோவுடனான ஒருங்கிணைந்த கூட்டாண்மை மூலம், மேப்மை இந்தியா தனது பயனர்களுக்கு வழங்கும் வரைபடங்கள் மற்றும் புவி சார் தகவல்கள், இப்போது இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பூமி கண்காணிப்பு தரவுகளுடன் ஒன்றிணைக்கப்படும்.


வெளிநாட்டை சார்ந்த செயலிகள், இந்த சேவைகளை இலவசமாக வழங்குகிறது என கூறினாலும், அதற்கு நாம் மறைமுகமாக அதிக அளவில் பணம் செலுத்துகிறோம் என்று வர்மா கூறினார்.


வியாழக்கிழமை, மேமைஇந்தியாவின் தாய் நிறுவனமான சி.இ. இன்ஃபோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (CE Info Systems Pvt. Ltd),  விண்வெளித் துறையுடன், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 


இதன் கீழ், விண்வெளித்துறை மற்றும் சி.இ. இன்ஃபோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து  செயல்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


ALSO READ | போலி செய்திகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள்; Twitter மத்திய அரசுக்கு SC நோட்டீஸ்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR