சனிக்கிழமை இரவு, ஒடிசாவில் உள்ள பாலசோர் சோதனை வரம்பில் இருந்து அணுசக்தியால் இயங்கும் உள்நாட்டு ஏவுகணை அக்னி -3-ன் முதல் சோதனையை இந்தியா நடத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நேரத்தில் ஏவுகணை அதன் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் அடைந்தது. இந்த ஏவுகணை பாகிஸ்தானில் எந்த இடத்தையும் ஒரு நொடியில் அழிக்க முடியும் என கூறப்படுகிறது.
 
ஊடக அறிக்கையின்படி, பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா தனது பாதுகாப்பு தயாரிப்புகளை மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் இராணுவத்தின் ஒருங்கிணைந்த மூலோபாய கட்டளை அக்னி -3 ஏவுகணையை மேற்பரப்பில் இருந்து சோதனை செய்தது. 


பாலசூரில் உள்ள APJ அப்துல் கலாம் தீவில் ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சின் (ITR) ஏவுதள வளாகத்திலிருந்து மொபைல் ஏவுகணைகள் மூலம் இந்த ஏவுகணை வீசப்பட்டது. இந்த ஏவுகணையின் இரவு சோதனை இராணுவத்தின் பயனர் சோதனைகளின் கீழ் நடத்தப்பட்டது.


ஏவுகணை ஏவப்படுவதற்கு ஒரு டிரக் அல்லது ரயிலின் மேடையில் மேலே அமைக்கப்பட்டால், அந்த தளம் மொபைல் லாஞ்சர் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம், ஏவுகணையை விரைவில் செலுத்த முடியும். இந்த நேரத்தில், இராணுவம் மற்றும் DRDO  விஞ்ஞானிகள் ஏவுகணையின் ஏவுதள பாதையை முழுமையாக கண்காணித்தனர். இந்த ஏவுகணை ஏற்கனவே 1.5 டன் எடையுள்ள ஆயுதங்களை ஏந்தியதற்காக இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.