சர்வதேச அளவில் அதிக மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தகவலை நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காண்ட் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


மாதம் சுமார் 150 கோடி ஜிபி டேட்டா பயன்படுத்தப்படும் நிலையில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவை ஒன்றிணைத்தாலும், இந்திய மொபைல் டேட்டா பயன்பாடு அதிகமாக இருக்கிறது. என தெரிவித்துள்ளார். 


இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் நொடிக்கு 12.12 எம்.பி.யாக இருந்த நிலையில், நவம்பர் மாத நிலவரப்படி நொடிக்கு 18.82 எம்.பி.யாக அதிகரித்துள்ளது. இது 50% உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.