அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை ஒடிஸா கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி அடைந்ததாக எஸ்எப்சி(SFC) கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரித்வி 2 ஏவுகணை ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஏவுகணையை ஒடிஸா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்திய ராணுவத்தின் SFC  சோதனை செய்தனர். அப்போது கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மிகவும் துல்லியமாக தனது இலக்கை அடைந்தது.
 
இந்த ஆண்டில் நடத்தப்படும் மூன்றாவது ஏவுகணை சோதனை இதுவாகும். இதே இடத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி அக்னி- 5 ஏவுகணையும், பிப்ரவரி 6-ஆம் தேதி அக்னி 1 ஏவுகணையும், பிப்ரவரி 7-ஆம் தேதி பிரித்வி 2 ஏவுகணையும் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


9 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் வரை தாக்கும் வல்லமை கொண்டது. கடற்படையினரின் பிரித்வி 2 ஏவுகணை தனுஷ் ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது.


(தகவல்:இந்திய இராணுவச் செய்திகள்)