அணு ஆயுதங்களை ஏந்தியபடி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் அக்னி 5 ஏவுகணையின் இறுதி சோதனை இன்று காலை 9.53  மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவுகளிலிருந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த சக்திவாய்ந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது. அக்னி-5 ஏவுகணையானது 5,000 கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிப்படுவதை விட வேகமாக பயணிக்கும் திறன் கொண்டது அக்னி-5 ஏவுகணை. அதனால் இதனை வழிமறித்து தாக்குவதும், ரேடார் மூலம் கண்டறிவதும் கடினம். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வைத்திருக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.


பிரதமர் உத்தரவிட்டால் மட்டுமே அக்னி 5 ஏவுகணையை ஏவ முடியும் என்ற விதி உள்ளது. நான்காவது அக்னி-5 சோதனை கடந்த டிசம்பர் 26, 2016 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தகக்து.