இன்ஸ்டாகிராமில் உள்ள குறைபாட்டை கண்டறிந்த தமிழ்நாட்டை சேர்ந்த லக்ஷ்மன் முத்தையாவிற்கு சுமார் ரூ. 20 லட்சம் கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையை சேர்ந்த தொழில்நுட்ப பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் லக்ஷ்மன் முத்தையா. இவர் முகநூளின் போட்டோ மற்றும் வீடியோ பகிரும் செயலியான இன்ஸ்டாகிராமில் உள்ள குறைபாட்டை கண்டறிந்துள்ளார். அதனை சரிசெய்துள்ள பேஸ்புக், அதற்கு பரிசாக 30,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 20 லட்சம் பரிசாக வழங்கியுள்ளது. பாஸ்வேர்டை மீண்டும் அமைக்க சொல்லி வரும் கோரிக்கை மூலம் ஒருவரின் இன்ஸ்டிராம் கணக்கை ஹேக் செய்ய முடியும் என்பதே லக்ஷ்மனின் குற்றச்சாட்டு. 


இது தொடர்பாக அவர் கூறுகையில்; “இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே பேஸ்புக் பாதுகாப்பு குழுவிடம் அறிக்கையாக கூறினேன். அந்த அறிக்கையில் போதுமான தகவல் இல்லாததால் அவர்களால் அதனை சரிசெய்ய முடியவில்லை. அதன்பிறகு சில இ-மெயில் ஆதாரங்கள் மற்றும் இது தொடர்பான வீடியோ மூலம் அவர்களிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க முடியும் என்பதை நிரூபித்தேன். பேஸ்புக் குழு தற்போது அதனை சரிசெய்துள்ளது. அதனை கண்டுபிடித்து கூறியதற்கு எனக்கு 30,000 டாலர் பரிசாக வழங்கியதாகவும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.