நாடு முழுவதும் 2018-ம் ஆண்டை வரவேற்கும் புத்தாண்டு நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர். ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தில் நண்பர்கள், உறவினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வது வழக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் கட்செவியஞ்சல் செயலியின் வருகைக்கு பின், புத்தாண்டு வாழ்த்துகளில் கட்செவியஞ்சல் சேவையும் முக்கியமான இடத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், 2018-ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகளை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டதில் இந்தியர்கள் சாதனை படைத்துள்ளதாக கட்செவியஞ்சல் நிறுவனம் அறிவித்துள்ளது.


சரியாக டிசம்பர் 31, 2017 இரவு 11:59 மணியில் இருந்து புதிய ஆண்டு பிறக்கும் 12 மணி வரை உள்ள இடைவெளியில் இந்தியாவில் மட்டும் சுமார் 20 பில்லியன் மக்கள் தங்களின் உறவினர்கள் மட்டும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த 20 பில்லியன் மக்கள் பயன்பாட்டினால் கட்செவியஞ்சல் செயலி மிகப்பெரிய மைல்கல்லை அடைந்திருப்பதாகவும் அந்நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. 


இதனுடன் கட்செவியஞ்சலில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய அப்டேட்களுக்கு பின்பு நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு நள்ளிரவில் வாட்ஸ்அப்பில் அதிகளவு பயன்பாட்டினால் பல நாடுகளில் சில மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியதும் குறிப்பிடத்தக்கது.