விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்; அமைச்சரவை ஒப்புதல்!
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த திட்ட தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகா நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டத் தொடருக்கு பின்னர் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்...
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள் மற்றும் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்தார்.