இன்பினிக்ஸ் தனது புதிய ஹாட் 10 எஸ் தொலைபேசியை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசி 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி விலை ரூ .9,999 மற்றும் ரூ .10,999க்கு விற்பனை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் (Infinix Hot 10S) தொலைபேசியின் முதல் விற்பனை மே 27 அன்று நடைபெறும். Infinix Hot 10S இன் Heart of Ocean, Morandi Green, 7-Degree Purple மற்றும் 95-Degree Black  நிறத்தில் கிடைக்கும். புதிய இன்பினிக்ஸ் ஹாட்10எஸ்  ஸ்மார்ட்போன் (Smartphone) 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.


ALSO READ | Redmi புதிய போன் மற்றும் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்: அதிரடி விலை, அசத்தலான அம்சங்கள், விவரம் இதோ


இந்த போனில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, ஏஐ லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் கொண்டிருக்கும் ஹாட் 10எஸ் மாடலில் டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 10,999 ஆகும். முதல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR