ரியல்மியின் புதிய மொபைல் - வெளியான அசத்தல் அப்டேட்
ரியல்மி நிறுவனம் வெளியிடவிருக்கும் புதிய ஸ்மார்ட் ஃபோன் குறித்த தகவல்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.
ரியல்மி நிறுவனம் பல்வேறு புது ஸ்மார்ட்ஃபோன் மாடல்களை அறிமுகம் செய்தற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்ஃபோனாக ரியல்மி 10 சீரிஸ் உள்ளது. தற்போது அந்த மொபைல் குறித்து ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நவம்பர் மாத வாக்கில் வெளியீடு இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் வென்னிலா வேரியண்ட், ரியல்மி 10 ப்ரோ, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் ரியல்மி 10 4ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், இதுபற்றி ரியல்மி எந்த தகவலும் வெளியிடவில்லை.
புது சாதனம் அறிமுகமாவதை உணர்த்தும் வகையில் ரியல்மி நிறுவன துணை தலைவர் மாதவ் சேத் மூன்று படங்களை பகிர்ந்து இருந்தார். அதில், "மூன்று முக்கிய லீப்-ஃபார்வேர்டு தொழில்நுட்பங்கள்" என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக ரியல்மி 10 சீரிசில் குறிப்பிடத்தக்க அப்கிரேடு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இவரின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த ரியல்மி குளோபல் இவை நவம்பர் மாதம் அறிமுகமாகும் என தெரிவித்து இருந்தது.
அதில், "புதிய ரியல்மி நம்பர் சீரிஸ் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்துடன் #realme10Series எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | கூண்டை விட்டு பறந்த பறவை... டிவிட்டரை கைப்பற்றினார் எலான் மஸ்க்!
ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்த வகையில், இதுவரை வெளியான தகவல்களின் படி புதிய ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குறைந்த பட்சம் ரியல்மி 10 ப்ரோ அல்லது ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கருதப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ