புதுடெல்லி: இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அனைவராலும் விரும்பப்படுகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் தங்கள் பயனர்களை மகிழ்விக்க அவ்வப்போது பல சலுகைகள் மற்றும் விற்பனைகளை அறிவித்து வருகின்றன. இன்று அதாவது அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கி உள்ளது. இந்த விற்பனையில், நீங்கள் அற்புதமான ஒப்பந்தங்கள், பல புதிய தயாரிப்புகள் மற்றும் வங்கி சலுகைகளைப் பெறுகிறீர்கள். இதன் முழு விவரத்தை இங்கே விரிவாக பார்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல், (Amazon Great Indian Festival 2021) அக்டோபர் 3 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசானில் மாதம் முழுவதும் தொடங்கியது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு, இந்த விற்பனை அக்டோபர் 3 -க்கு பதிலாக அக்டோபர் 2 -ல் தொடங்கியது.


ALSO READ: விலை குறையும் ஐபோன்கள்! ஆர்வத்தில் மக்கள்!


அமேசானின் இந்த விற்பனையில், எலக்ட்ரானிக்ஸ் முதல் ஆடை வரை அனைத்து பொருட்களுக்கும் அற்புதமான சலுகைகளைப் பெறலாம். அனைத்து முன்னணி பிராண்டுகளான மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றில் நீங்கள் பெரிய தள்ளுபடியைப் பெறலாம். இதனுடன், இந்த சலுகைகளில் வங்கி சலுகைகள், கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் போன்ற பலன்களையும் பெற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களில் சலுகைகள் பற்றி பேசுகையில், நீங்கள் ஐபோன்களில் பெரிய தள்ளுபடியைப் பெறலாம். நீங்கள் iPhone 12 Pro இல் (iPhone 12) ரூ. 20,401 தள்ளுபடி பெறலாம், இதன் விலை ரூ .1,34,399 ஆக உள்ளது, மேலும் இதில் நீங்கள் மொத்தம் ஏழு பேண்ட் ஆஃபர்கள், கட்டணமில்லா இஎம்ஐ மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளையும் பெறலாம். நீங்கள் iPhone 11 இன் 64GB வேரியன்ட்டை 38,999 ரூபாய்க்கு மட்டுமே வாங்க முடியும், iPhone XRக்கும் சுமார் 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.


iPhones மட்டுமல்ல, சாம்சங், போகோ, ரெட்மி மற்றும் ஒன்பிளஸ் போன்ற சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் தொலைபேசிகளிலும் சிறந்த சலுகைகளைக் பெறலாம். 


ஸ்மார்ட்போன்களுடன், இயர்போன்கள், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் டிவிகள், சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் 50% க்கும் அதிகமான தள்ளுபடி கிடைக்கும்.


ALSO READ: ரூ. 33000 க்கு அசத்தலான சாம்சங் 5 G ஸ்மார்ட் போன் !


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR