இன்ஸ்டாகிராம் சமீபத்தில் தனது iOS பயனர்களுக்காக ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக iPhone 13 மற்றும் iPhone 13 Pro பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் iPhone 13 மற்றும் iPhone 13 Pro தொலைபேசிகளின் பயனர்கள் இன்ஸ்டாகிராமின் பயன்பாட்டில் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், இந்த புதுப்பிப்பு மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முயன்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iPhone 13 और iPhone 13 Pro பயனர்களுக்கு பிரச்சனை


முதல் iOS 13 பீட்டாவுக்குப் பிறகு, இந்த தொலைபேசிகளின் பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் (Instagram) பதிப்புகளில் சிக்கல்களை எதிர்கொண்டனர். IOS பீட்டா வெளியிடப்பட்டதிலிருந்து, பயனர்கள் தங்கள் சமூக ஊடக செயலிகளில் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.


இந்த சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்கின்றனர்


பயனர்களின் தொலைபேசி (Mobile Phone) சைலெண்ட் மோடில் இருந்தால், அவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிசைக் கேட்க முடிவதில்லை. மீடியா வால்யூமை அதிகரித்த பிறகும், ஸ்டோரீஸ் மியூடிலேயே காணப்படுகிறது.


இது தவிர, இந்த தொலைபேசிகளில் செயலியின் தளவமைப்பு தொடர்பாக பயனர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இன்ஸ்டாகிராம் தனது புதிய அப்டேட் மூலம் இந்த புகாரை நீக்க முயன்றது.


ALSO READ: மொபைல் சந்தையை கலக்க வருகிறது Oppo-வின் புதிய போன்: நிமிடங்களில் full charge 


Instagram இந்த நடவடிக்கை எடுத்தது


சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் பயனர்களின் புகார்களைக் கேட்டு அவற்றை சரிசெய்ய முயன்றது. இன்ஸ்டாகிராம் அதன் iOS பயனர்களுக்கான செயலி மூலத்தில் ஒரு புதுப்பிப்பை வெளியிட்டது. இதனால் இந்த இரண்டு பிழைகளையும் சரிசெய்ய முடியும்.


இன்ஸ்டாகிராம் ஸ்டோரீசில் மியூட் காணப்படுகின்றது என்ற பயனர்களின் குற்றச்சாட்டை தனது 206.1 அப்டேட் மூலம் நிறுவனம் சரி செய்தது. லேஅவுட் தொடர்பான பிரச்சனையும் இந்த அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டது.


இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட் மூலம் இரண்டு பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளன. நீங்களும் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், ஆப் ஸ்டோருக்குச் சென்று உங்கள் இன்ஸ்டாகிராம் செயலியைப் புதுப்பிக்கவும்.


ALSO READ: Potato Chips விற்கும் கூகிள் நிறுவனம்: இதுதான் காரணம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR