மொபைல் சந்தையை கலக்க வருகிறது Oppo-வின் புதிய போன்: நிமிடங்களில் full charge

ஓப்போ விரைவிலேயே Oppo K9 Pro போனை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இது ஒரு 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த போன் பல அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 25, 2021, 12:50 PM IST
  • ஒப்போ ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.
  • ஓப்போ நிறுவனம், Oppo K9 Pro-வின் முக்கிய அம்சங்களை சீன சமூக வலைத்தளமான Weibo-வில் உறுதி செய்துள்ளது.
  • இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி மற்றும் 60W சூப்பர் ஃப்ளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும்.
மொபைல் சந்தையை கலக்க வருகிறது Oppo-வின் புதிய போன்: நிமிடங்களில் full charge

ஒப்போ ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனைப் பற்றிய பல சுவாரசியமனா விஷயங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஓப்போ விரைவிலேயே Oppo K9 Pro போனை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இது ஒரு 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த போன் பல அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. டிஸ்பிளே முதல் கேமரா வரை, அனைத்து அம்சங்களும் இதில் அற்புதமாக உள்ளன.

ஓப்போவின் (Oppo) இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இதன் அம்சங்கள் சீனாவில் ஒப்போவின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே இப்படி இருக்கும்:

ஓப்போ நிறுவனம், Oppo K9 Pro-வின் முக்கிய அம்சங்களை சீன சமூக வலைத்தளமான Weibo-வில் உறுதி செய்துள்ளது. இந்த போன் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. கூடுதலாக, இதில் பயனருக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 90fps சப்போர்ட் மற்றும் HDR 10 சப்போர்ட் ஆகியவை கிடைக்கும்.

பேட்டரி அம்சங்கள்

பேட்டரியைப் பற்றி பேசுகையில், இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் (Smartphone) 4,500mAh பேட்டரி மற்றும் 60W சூப்பர் ஃப்ளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும். பேட்டரியில் ஒரு புதிய சிறப்பம்சமாக, இந்த முறை நிறுவனம் ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. தொலைபேசி வெறும் 16 நிமிடங்களில் 0 முதல் 50% வரை சார்ஜ் ஆகும்.

ALSO READ: iPhone-ஐ மறக்க வைக்கும் OPPO-வின் புதிய ஸ்மார்ட்போன்: அசத்தும் அம்சங்கள்

உங்கள் தொலைபேசியை (Mobile Phone) இரவு முழுவதும் சார்ஜ் செய்தாலும், அது ஓவர் ஹீட் ஆகாது, அதன் பேட்டரியும் மோசமடையாது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் ஐந்து கோர் பாதுகாப்புடன் வருகிறது.

இதர அம்சங்கள்

இந்த புதிய ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் பற்றிய எந்த தகவலையும் ஒப்போ தற்போது வெளியிடவில்லை. ஆனால் Oppo K9 Pro மூன்று கேமரா அமைப்புடன் வரும் என்பது நிச்சயம். இது ஒரு 5 ஜி ஸ்மார்ட்போன். இதில் நீங்கள் வைஃபை 6 மற்றும் என்எஃப்சி ஆதரவையும் பெறுவீர்கள்.

முன்பு குறிப்பிட்டது போல, ஒப்போ ஸ்மார்ட்போனை சீனாவில் செப்டம்பர் 26 அன்று அறிமுகப்படுத்தப் போகிறது. Oppo K9 Pro-வுடன், நிறுவனம் Oppo Smart TV K9 (75 இன்ச்) மற்றும் Oppo Watch Free-யும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அறிமுக நிகழ்வு, சீன நேரப்படி மாலை 5 மணிக்கும், இந்திய நேரப்படி மாலை இரவு 2:30-க்கும் நடைபெறுகிறது.

ALSO READ: ரகசியமாக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது Redmi, முழு விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News