iPhone 14 வாங்கணுமா? இங்கு வாங்கினால் கிடைக்கும் அட்டகாசமான சலுகைகள், விவரம் இதோ
iPhone 14 Discount Offers: புதிய ஐபோன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அல்லது ஏற்கனவே உள்ள ஐபோனை மேம்படுத்த விரும்புகிறீர்களா? அப்படி என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
iPhone 14 தள்ளுபடி சலுகைகள்: ஐபோன் பிரியரா நீங்கள்? புதிய ஐபோன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அல்லது ஏற்கனவே உள்ள ஐபோனை மேம்படுத்த விரும்புகிறீர்களா? அப்படி என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்போது ஐபோன் வாங்க பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஆகையால், இந்த நேரத்தில் ஐபோன் வாங்க முடிவு செய்தால், வாடிக்கையாளர்கள் பல வித நன்மைகளின் பலன்களை அனுபவிக்க முடியும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 ஐ வாங்குவதற்கும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன. இதில் வங்கி சலுகைகளும் அடங்கும். இதன் விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த மூன்று இணையதளங்களிலும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன
அறிக்கையின்படி, நீங்கள் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் இமேஜின் ஸ்டோர் (Imagine Store) ஆகியவற்றிலிருந்து iPhone 14 ஐ வாங்கலாம். இந்த போனை வாங்கினால் ரூ.9 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதனுடன், நீங்கள் உடனடி கேஷ்பேக்கும் பெறலாம்.
வாடிக்கையாளர்களிடம் ஹெச்டிஎஃப்சி வங்கியின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இருந்தால், அதை பயன்படுத்தி போனை வாங்கினால், இன்னும் அதிக நன்மை கிடைக்கும். பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய போன் வாங்க நினைத்தால், அதிலும் தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் படிக்க | புதிய 30 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி திட்டங்கள்! அசத்தும் ஜியோ!
அமேசானில் 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்
ஐபோன் 14 அமேசான் வர்த்தக இணையதளத்தில் ரூ.73,900க்கு விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் HDFC வங்கி அட்டையைப் பயன்படுத்தி இந்த தொலைபேசியை வாங்கினால், 4,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். மேலும் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.18,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
போன் எக்ஸ்சேஞ்சில் 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி
ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கரட்டில், ஐபோன் 14 73,900 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தளத்திலும், எச்டிஎஃப்சி கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ.4,000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ் ஆஃபர், அதாவது பரிமாற்ற சலுகையில் தங்கள் பழைய போனை மாற்றிக்கொண்டால், 20 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தினால் அதிக பலன்கள்
இமேஜின் ஸ்டோரின் இணையதளத்தில் ஐபோன் 14 இன் அடிப்படை 128GB மாறுபாடு ரூ.79,900 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்கினால் 5 ஆயிரம் ரூபாய்க்கான ஒரு முறை தள்ளுபடி கிடைக்கும். இதனுடன், HDFC வங்கி அட்டையைப் பயன்படுத்தினால் ரூ.4000 கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் இந்த போனை ரூ.70,900க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க | சோகமான 2023... ஆயிரக்கணக்காணோர் வேலையிழப்பு - இது வெறும் டிரைலர் தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ