Flipkart, Amazon Offer: iPhone 13 மற்றும் 14 இல் பம்பர் தள்ளுபடி

பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் சேலில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13 ஆகியவற்றில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதே விலையில் அமேசான் தளத்திலும் இந்த போன் கிடைக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 17, 2023, 08:10 AM IST
  • ஐபோன் 14ல் தள்ளுபடி.
  • ஐபோன் 13ல் தள்ளுபடி.
  • பிக் சேவிங் டேஸ் சேல்.
Flipkart, Amazon Offer: iPhone 13 மற்றும் 14 இல் பம்பர் தள்ளுபடி title=

ஐபோன் 13 vs ஐபோன் 14: அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ரிபப்ளிக் சேல் தொடங்கியுள்ளது. பிக் சேவிங் டேஸ் சேல் என்ற பெயரில் பிளிப்கார்ட்டில் இந்த விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனை 20 ஜனவரி 2023 வரை இயங்கும். பிளிப்கார்ட்டில் பிக் சேவிங் டேஸ் சேலில் பல 5ஜி போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் குறைந்த விலையில் ஐபோன் வாங்க பிளான் செய்துக் கொண்டு இருந்தால் இந்த விற்பனை பயன் தரும். மேலும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் iPhone 14 மற்றும் iPhone 13 இல் பெரும் தள்ளுபடிகளை வழங்கப்படுகிறது, ஆனால் இந்த சலுகை உங்களுக்கு சிறந்ததா? இதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

ஐபோன் 14ல் தள்ளுபடி
ஐபோன் 14 பிளிப்கார்ட்டில் 66,999 ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​அதன் ஒரிஜினல் விலை ரூ.79,900 ஆக இருந்தது. பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ஐபோன் 14 இல் 12,901 பிளாட் தள்ளுபடி வழங்குகிறது. இந்த விலை ஐபோனின் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Flipkart Offer: பாதிக்கும் குறைவான விலையில் பிரீமியம் சாம்சங் போன், முந்துங்கள்!!

ஐபோன் 13ல் தள்ளுபடி
ஐபோன் 14 உடன், விற்பனையில் ஐபோன் 13 க்கும் தள்ளுபடிகள் உள்ளன. அதன்படி பிளிப்கார்ட்டின் விற்பனையில், ரூ.59,499 ஆரம்ப விலையில் iPhone 13 ஐ பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விலை 128 ஜிபி மாடலுக்கும் உள்ளது. மறுபுறம் ஆப்பிள் அதிகாரப்பூர்வ தளத்தில் iPhone 13 இன் விலை ரூ.69,900 ஆகும். அதன்படி, விற்பனையில் ஐபோன் 13க்கு ரூ.10,401 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, இரண்டு போன்களிலும் ரூ.1,000 தள்ளுபடி வங்கி அட்டை சலுகையும் வழங்கப்படுகிறது.

ஐபோன் 13 VS ஐபோன் 14
ஐபோனின் இரண்டு மாடல்களிலும் தள்ளுபடி கிடைக்கும். எனவே, மனதில் எழும் கேள்வி என்னவென்றால், எந்த ஒப்பந்தம் அதிக நன்மை பயக்கும் என்பதிகௌ தான். இரண்டு கைபேசிகளும் ஒரே சிப்செட்டுடன் வருகின்றன. இது தவிர, பேட்டரி, டிஸ்ப்ளே மற்றும் அடிப்படை கேமரா அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. வடிவமைப்பைப் பொறுத்தவரை, இரண்டையும் வேறுபடுத்துவது மிகவும் கடினம்.

மேலும் படிக்க | அன்லிமிடெட் ஆ பேசனுமா? ரூ 179 ரீசார்ஜ் பிளான்..அள்ளி வீசும் ஏர்டெல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News