ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X விற்பனை இன்று முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. கடந்த வாரம் முன்பதிவுகள் துவங்கிய நிலையில் ஐபோன் X ஸ்மார்ட்போனிற்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10,000 வரை கேஷ்பேக் மற்றும் ஜியோ பைபேக் சலுகைகள் வழங்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல் தளத்தில் ஐபோன் X முன்பதிவு செய்யப்படாத நிலையில் நேரடி விற்பனை மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது. இன்று மாலை 6.00 மணி முதல் நாளை காலை 7.00 மணிக்குள் ஐபோன் X வாங்குவோருக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய விலை:-


* ஐபோன் X விலை ரூ.89,000 (64 ஜிபி).


* ஐபோன X (256 ஜிபி) ரூ.1,02,000.


சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கும். 


ஐபோன் X சிறப்பம்சங்கள்:


ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது. 


face recognition வழங்க டூயல்-கோர் சார்ந்த நியூரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி துல்லியமாக இயங்க வழி செய்யும் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் X ஸ்மார்ட்போன் 7000-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 


வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ள புதிய ஐபோனில் 12 எம்பி பிரைமரி டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் OIS வசதியும், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.