IRCTC New Service: இந்தியாவில் குறைவான விலையில் பயணம் செய்வதற்கான போக்குவரத்து தான் ரயில்வழி போக்குவரத்து. ரயிலில் பயணம் செய்வது பட்ஜெட்டுக்குள் இருப்பது ஒருபுறமிருந்தாலும், ரயில் பயணம் சவுகரியமாகவும் இருக்கிறது.  அலுவலகம் போவது, கல்லூரிக்கு போவது, சுற்றுலா போவது என இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.  மக்களின் பயணத்தை வசதியாக்கி தரும் வகையில் இந்திய ரயில்வேயும் தனது பயணிகளுக்கு பல வசதிகளை செய்து தருகிறது. தனது பயணிகளின் நலனுக்காக பல வசதிகளை செய்துவரும் ரயில்வே நிர்வாகம் தற்போது மேலும் பயணிகளின் வசதிக்காக தற்போது ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.  பல சமயங்களில் எங்காவது தொலைவில் செல்ல வேண்டும், ஆனால் ரயில் டிக்கெட் வாங்க பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு தற்போது இந்திய ரயில்வே ஒரு தீர்வை கண்டுள்ளது.  அதாவது அப்படிப்பட்ட சூழ்நிலையில் பயணிகள் இனி பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜியோவை ஓரங்கட்டிய ஏர்டெல்: எதில் தெரியுமா?


இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதி, வரையறுக்கப்பட்ட கட்டண விருப்பங்கள், பரிவர்த்தனை தோல்வி மற்றும் நெருக்கடியான முன்பதிவு காலங்களில் உடனடி பணம் செலுத்த வேண்டிய அவசியம் போன்ற பயணிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பணம் செலுத்தாமல் Paytm செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.  பயணிகளுக்கு கிடைக்கும் இந்த புதிய சேவையின் பெயர் "Buy Now, Pay Later".  இதுகுறித்து ஐஆர்சிடிசி தெரிவித்துள்ள தகவல்களின்படி, Paytm போஸ்ட்பெய்ட் சேவை இப்போது ரயில்வே பயன்பாட்டில் இயக்கப்பட்டுள்ளது.  Paytm போஸ்ட்பெய்ட் சேவையில், பயணிகள் பணம் எதுவும் செலுத்தாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.  ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நபர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  முன்பதிவைப் பெற்ற பிறகு, பணம் செலுத்துவதற்கு ஐஆர்சிடிசி ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கும்.  இந்த சலுகைக் எப்போது வேண்டுமானாலும் மாறுபடலாம், எனவே கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணம் செலுத்துவது முக்கியம்.  இப்போது Paytm-ல் "Buy Now, Pay Later" சேவையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.


1) முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் ஐஆர்சிடிசி செயலியில் லாக் இன் செய்ய வேண்டும்.


2) உங்களிடம் ஆப்ஸ் இல்லையென்றால் கூகுள் பிளே ஸ்டாரிலிருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்.


3) இப்போது பெயர், தேதி, போர்டிங் ஸ்டேஷன் உள்ளிட்ட உங்கள் பயண விவரங்களை நிரப்ப வேண்டும்.


4) இப்போது நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலைத் தேர்ந்தெடுத்து முன்பதிவுக்குச் செல்ல வேண்டும்.


5) கட்டணப் பிரிவை அடைந்ததும் அந்த பகுதியில் 'இப்போது வாங்கு பிறகு பணம் செலுத்துதல்' என்கிற ஆப்ஷன் விருப்பத்தைப் பெறுவீர்கள்.


6) இப்போது அடுத்த கட்டத்தில் நீங்கள் Paytm போஸ்ட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும், இங்கே நீங்கள் உங்கள் Paytm-ல் லாக் இன் வேண்டும்.


7) நீங்கள் Paytm செயலியில் லாக் இன் செய்த பிறகு உங்களுக்கு வெரிஃபிகேஷன் குறியீடு அனுப்பப்படும்.


8) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.


மேலும் படிக்க | ரூ.10 ஆயிரம் விலையில் சூப்பரான ஸ்மார்ட்போன் மாடல்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ