பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் 10 லட்சம் வாடிக்கையாளர்களுடன் அதன் நீண்டகால கனவான பியர்-டு-பியர் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் பைலட் திட்டத்தை ஆரம்பித்தது.  ஆனால் வாட்ஸ்அப்பால் இந்த திட்டத்தை இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.  யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் செய்யப்படும் டிரான்ஸாக்ஷன்கள் பல ரெக்கார்டுகளை முறியடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் ரீல்ஸை எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி?


கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, 3.5 பில்லியன் ட்ரான்ஸாக்ஷன்கள் மூலம் 6,54,351 கோடி ரூபாய் வரை  பணம் பரிமாறப்பட்டு இருக்கிறது.  பேடியம், கூகிள் பே, போன் பே போன்றவை தற்போது இந்தியாவின்  முக்கிய யுபிஐ ஆக உள்ளது.  இதில் போன் பே தான் ட்ரான்ஸாக்ஷன்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல்கள் கூறுகிறது, இதன் சந்தை அளவு 47 சதவிகிதம், கூகிள் பே-ன் சந்தை அளவு 35 சதவிகிதம் ஆகவும் உள்ளது.


இதில் தாமதமாக களமிறங்கிய வாட்ஸ்அப்பின் புள்ளிவிவரங்கள் மோசமான சரிவை சந்தித்துள்ளது. தற்போது வாட்ஸ் அப் அதன் யுபிஐ கட்டண அளவின் 0.01 சதவீத பங்கை மட்டுமே கொண்டுள்ளது.  நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(என்பிசிஐ) அனுமதி வழங்கிய பிறகு, கடந்த ஆண்டு நவம்பரில் வாட்ஸ்அப் யுபிஐ கட்டண சேவையை இந்தியாவில் தொடங்கியது. 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் ஆனது பேடியம், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற கட்டண சேவைகளை முந்தமுடியாமல் இருக்கிறது.  இது குறித்து சைபர் வல்லுநர் பவன் துகல் கூறுகையில், வாட்ஸ்அப் பேமெண்டை மிக துல்லியமாக பார்க்க வேண்டும்.  பண பரிமாற்றம் செய்வதற்கு மிக முக்கியமான டேட்டாக்களை நாம் கையாளுவதால் இதனை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 



கடந்த வியாழக்கிழமையன்று இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் இந்திய ரூபாய் சின்னத்தை வழங்கியுள்ளது.  இதுபோன்ற அம்சங்களை வழங்குவதால் இந்தியாவில் வாட்ஸ்அப் முலம் டிரான்ஸாக்ஷன் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும் இது இந்திய பயனர்களுக்கு கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது.  48 மணிநேரத்திற்குப் பிறகு வாட்ஸ்அப் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தி பயனர்கள் கேஷ்பேக்கைப் பெற முடியும்.  இருப்பினும், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வாட்ஸ்அப் பேமெண்ட்டுகள் முன்னேற்றமடைவது சுலபமானதல்ல என்று கருதப்படுகிறது.


மேலும் படிக்க | வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் லொகேஷன் ஸ்டிக்கரை வைப்பது எப்படி ?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR