சந்திரயான்-2  ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திராயன்-2 விண்கலம், அடுத்த மாதம் 9-ம் தேதிமுதல் 16 ஆம் தேதிக்குள் ஏவப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், 15 ஆம் தேதி அனுப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருள் சூழ்ந்தும், கரடு முரடாகவும் காணப்படும் நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்படுகிறது.


பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் 2 அனுப்பப்பட உள்ளதாக கூறினார். சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு விண்கலம் மாறும். இறுதியாக நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்படும். 


செப்டம்பர் 6 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக ரோவர் வாகனத்தை நிலாவில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். பிஎஸ்எல்வி எம்கே 3 என்ற ராக்கெட் மூலம் சந்திரயான் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் மொத்த எடை 3 புள்ளி 8 டன் ஆகும். சந்திராயன்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 நவீன சாதனங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.