Jio Recharge: தற்போது ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, மக்கள் புதிய படங்களை பார்ப்பதற்கு அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார், நெட்பிலிக்ஸ் போன்ற தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனை பார்ப்பதற்கு ஒவ்வொரு மாதமும் சில தொகையை செலவு செய்ய வேண்டும், ஆனால் தற்போது இவை இலவசமாக கிடைக்க உள்ளது.  ஜியோ நிறுவனம் தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தில் பிரபல ஓடிடி தளங்களை இலவசமாக வழங்க உள்ளது.  மேலும் பல ஆபர்களை இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் வழங்குகிறது, இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | லேப்டாப் அதிகம் ஹேங் ஆகிறதா? இத மட்டும் பண்ணுங்க போதும்!


ஜியோவின் ரூ. 1499 ரீசார்ஜ் திட்டம்


ஜியோ ப்ரீபெய்ட் சிம் நீங்கள் பயன்படுத்தினால் ரூ. 1499 திட்டம் பல நன்மைகளை பயனர்களுக்கு தருகிறது.  இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய்யை சேமிக்க முடியும்.  நீங்கள் ஓடிடியில் அதிகம் படங்களை பார்ப்பீர்கள் என்றால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் Netflix, Amazon Prime போன்ற பெரிய ஓடிடிகளை பயன்படுத்தி கொள்ள முடியும். இதனுடன், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் ஜி5 போன்ற தளங்களையும் இலவசமாக பார்த்து கொள்ளலாம்.  மேலும், இந்த திட்டத்தில் வரம்பற்ற டேட்டா, அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். 


ஜியோ 2024 ரீசார்ஜ் திட்டங்கள் 


- ரூ. 395 திட்டத்தின் மூலம் 84 நாட்கள் வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற 5G டேட்டா (3 ஜிபி), 1000 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். 


- ரூ.155 திட்டத்தின் மூலம் 28 நாட்கள் வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டா (2 ஜிபி), 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.  


- ரூ.209 திட்டத்தின் மூலம் 28 நாட்கள் வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டா 28ஜிபி (1ஜிபி/நாள்), 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.  


- ரூ.239 திட்டத்தின் மூலம் 28 நாட்கள் வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டா 42ஜிபி (1.5ஜிபி/நாள்), 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.  


- ரூ.149 திட்டத்தின் மூலம் 20 நாட்கள் வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டா 20ஜிபி (1ஜிபி/நாள்), 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.  


- ரூ.1559 திட்டத்தின் மூலம் 336 நாட்கள் வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டா 24ஜிபி, 3600 எஸ்எம்எஸ், வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஜியோசினிமா பிரீமியம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.  


- ரூ.2,999 திட்டத்தின் மூலம் 365 நாட்கள் வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டா 912.5ஜிபி (2.5ஜிபி/நாள்), 100 எஸ்எம்எஸ்/நாள், வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஜியோ சினிமா பிரீமியம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.


- ரூ.666 திட்டத்தின் மூலம் 84 நாட்கள் வரம்பற்ற அழைப்பு, 126ஜிபி (1.5ஜிபி/நாள்) வரம்பற்ற டேட்டா, 100 எஸ்எம்எஸ்/நாள், வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் ஜியோ சினிமா பிரீமியம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.


மேலும் படிக்க | பெரும் அழிவில் சீன மொபைல் துறை..! இந்தியா கொடுத்த பலத்த அடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ