ஒரே ரீசார்ஜில் முழு 56 நாட்கள் ஜாலி: ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் நீண்ட செல்லுபடியாகும் திட்டங்களை கொண்டு வந்துள்ளது, இது பல நன்மைகளை வழங்குகிறது. நீங்கள் 56 நாட்கள் திட்டங்களை எடுக்க விரும்பினால், குறைந்த விலையில் வரும் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம். நல்ல விஷயம் என்னவென்றால், இது 5G வரவேற்பு சலுகையுடன் வருகிறது. இதில் வரம்பற்ற 5ஜி டேட்டா கிடைக்கும். வாருங்கள் இப்போது ஜியோ (Jio) நிறுவனம் கம்மி விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டங்கள் மற்றும் அந்த திட்டங்களின் நன்மைகளை குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ 56 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு வகைகளில் வரும் 56 நாட்கள் செல்லுபடியாகும் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டெலிகாமில் இருந்து நீங்கள் வாங்கக்கூடிய அனைத்து 56 நாட்கள் திட்டங்களும் இதோ - ரூ.533, ரூ.589, ரூ.479 மற்றும் ரூ.529. இந்த திட்டங்களில் சில 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகின்றன, சில 2 ஜிபி டேட்டாவுடன் வருகின்றன. சில திட்டங்களில் ஜியோ சாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தாவும் அடங்கும்.


மேலும் படிக்க | ரயில் கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை புக் செய்யலாம், எப்படி? உடனே படியுங்கள்


ஜியோ 533 திட்டத்தின் விவரங்கள்
ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 112ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்.


ஜியோ 589 திட்டத்தின் விவரங்கள்
ஜியோ ரூ.589 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனறே இந்த திட்டத்தில் மொத்தமாக 112ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் JioSaavn Pro, ஜியோடிவி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் அணுகலை வழங்குகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டம் வழங்குகிறது.


ஜியோ 479 திட்டத்தின் விவரங்கள்
ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்களின் (JioTV, JioCloud, JioCinema) அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்.


எனவே இந்த 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.


மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை! ஆகஸ்ட் 31-க்குள் இத பண்ணிடுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ