Jio Airtel Recharge Plans: இன்றைய உலகில் அனைவரிடமும் மொபைல் போன் உள்ளது. ஆனால் அந்த மொபைல் போன்களை பயன்படுத்த பலவித ரீசார்ஜ் திட்டங்கள் தேவைப்படுகின்றன. குறைவான தொகையில் அதிக நன்மைகளை அளிக்கும் ரீசார்ஜ் திட்டங்களை அனைவரும் நாடுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற பல திட்டங்களை வழங்குகின்றன. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்லின் இந்தத் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


ஏர்டெல் ரூ .448 திட்டம்


இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா (Data Plan), 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் நாட்டின் அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு ஆகிய வசதிகளை வழங்குகிறது. இது தவிர, வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை வாங்கினால், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான ஒரு வருட இலவச சந்தாவையும் பெறுவார்கள்.


ALSO READ: Jio அட்டகாச ரீசார்ஜ் பிளான்கள்: ரூ.98-ல் 21GB தரவு, வரம்பற்ற அழைப்பு, இன்னும் பல நன்மைகள்


ஏர்டெல் ரூ 398 திட்டம்


ஏர்டெல்லின் (Airtel) ரூ. 448 திட்டத்தைப் போலவே, இந்த திட்டத்திலும் வாடிக்கையாளரும் 28 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ், 3 ஜிபி டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்பு வசதி ஆகிய நன்மைகள் கிடைக்கும். ஏர்டெல் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் இலவச சந்தாவுடன், நிறுவனம் அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பின் 30 நாள் டிரயலையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.


ஜியோவின் ரூ .401 திட்டம்


ஜியோவின் இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் வாடிக்கையாளர்கள் தினமும் 3 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். எனினும், இதில் உள்ள கூடுதல் விஷயம் என்னவென்றால், நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு 6 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. மேலும், வாடிகையாளர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளைச் செய்ய முடியும். ஜியோ செயலிகளும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கு இலவச சந்தாவும் கிடைக்கும்.


ஜியோ ரூ .349 திட்டம்


ஜியோவின் (Jio) இந்த திட்டத்தை ரூ .349-க்கு பெறலாம். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவை கிடைக்கும். இதனுடன், ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற அனைத்து ஜியோ செயலிகளின் இலவச சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


ALSO READ: உங்களிடம் Airtel சிம் உள்ளதா? இப்படி செய்தால், ரூ.4 லட்சம் மதிப்பிலான நன்மைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR