மலிவு விலை ஸ்மார்போன் தயாரிப்பாளரான Jivi Mobile, வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ-வின் சலுகை மூலம் ரூ.699-க்கு ஸ்மார்ட் போன் வழங்க திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் உள்நாட்டு கைப்பேசி தயாரிப்பாளரான Jivi Mobiles நிறுவனத்துடன் Reliance Jio கைகோர்பது இதுவே முதல் முறை ஆகும். சமீபத்தில் Reliance Jio ஆனது தனது மலிவு விலை ஸ்மார் போனினை வைப்பு இருப்பு தொகை நிபந்தனை அடிப்படையில் சந்தைக்கு அரிமுகப்படுத்தியது. 


இந்த விற்பனையில் பயன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு Reliance Jio மீண்டும் அவரவரது இருப்புத் தொகையினை திரும்பியளிக்க வேண்டியுள்ளது. இந்த நிபந்தனையினை வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற மலிவு விலை ஸ்மார்ட் போன்களை Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு வழங்க Reliance Jio திட்டமிட்டுள்ளது.


இந்த சலுகையில் Reliance Jio ஆனது ரூ. 2200 மதிப்பிலான Jio Football offer-னை அரிமுகம் செய்கிறது. இந்த சலுகை மூலம் 22 வகையான 4G VoLte போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. இந்த பட்டியளில் ரூ.699 மதிப்பிலான் Jivi Energy E3 போனும் அடங்கும்.