மீண்டும் ஆரம்பம் ஆகிறது இலவச ஜியோபோன் புக்கிங்!!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஜியோ போன் புக்கிங் மீண்டும் தொடங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக 1500 ரூபாய் வைப்பு இருப்பு தொகையின் அடிப்படையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போனினை அறிமுகம் செய்தது. இதற்கனா முன்பதிவு கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.
ஜியோவின் இந்த திட்டமும் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இதன் இரண்டாவது கட்ட ஜியோ போன் புக்கிங் தொடங்க உள்ளது.
அதனால் தீபாவளிக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது கட்டமாக ஜியோ போன் விற்பனைக்கான புக்கிங் தொடங்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.