ஜியோவுக்கு 4,000 கோடி லாபம்... வாய் பிளந்த மற்ற நிறுவனங்கள்
செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டின் வருவாயில் ஜியோ நிறுவனம் 4,500 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஒன்று. பெரும்பான்மையானோரிடம் ஜியோ ஃபோனோ, ஜியோ சிம்மோ இருக்கிறது. இந்தச் சூழலில் அந்த அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாபம் 28 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஜியோ நிறுவனம் ரூ. 4 ஆயிரத்து 518 கோடி லாபம் ஈட்டியது. புதிய வாடிக்கையாளர்கள் இணைந்தது மற்றும் வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய் அதிகரித்தது உள்ளிட்டவை லாபம் அதிகரிக்க காரணங்களாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஜியோ லாபம் ரூ. 3 ஆயிரத்து 528 கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மூலம் கிடைக்கும் லாபம் 20.2 சதவீதம் அதிகரித்து ரூ.22 ஆயிரத்து 521 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.18 ஆயிரத்து 735 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ தற்போது மும்முரம் காட்டி வரும் நிலையில், இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, புதிய தலைமுறை தொழில்நுட்பம் அதிவேக இணைய வசதி, சீரான இணைப்பு கொண்டிருக்கும் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. முதலிடத்தில் சீனா இருக்கிறது.
மேலும் படிக்க | Flipkart Big Diwali Sale 2022: அசத்தல் ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடிகள்
ஜியோ பிளாட்பார்ம்ஸ் லாபம் 27 சதவீதம் அதிகரித்து ரூ. 4 ஆயிரத்து 729 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டு வாக்கில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் லாபம் ரூ. 3 ஆயிரத்து 728 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் வருவாய் 22.7 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 24 ஆயிரத்து 275 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 19 ஆயிரத்து 777 கோடியாக இருந்தது. ஜியோ நிறுவனம் ஈட்டியிருக்கும் இந்த லாபம் மற்ற நிறுவனங்களை வாய் பிளக்க வைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ