ரிலையன்ஸ் ஜியோ 90 நாட்கள் ரீசார்ஜ் திட்டம்: தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புதிய ஆண்டு முதல் சிறப்பான சலுகைகளை வழங்கியது. அதன்படி தற்போது நாம் காண உள்ள ரீசார்ஜ் திட்டத்தில் தகுதியான வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வொய்ஸ் கால்கள், அன்லிமிடெட்  டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 90 நாட்களுக்கு ஜியோ 5ஜி வரவேற்பு சலுகை போன்ற பலன்களைப் பெறுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிலையன்ஸ் ஜியோ ரூ.749 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.749 திட்டத்தில் அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, இதில் தகுதியான வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்பு , அன்லிமிடெட்  டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 90 நாட்களுக்கு ஜியோ 5ஜி வரவேற்பு சலுகை போன்ற பலன்களைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில், மொத்தம் 180ஜிபி அதிவேக டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கிறது, அதன் பிறகு நெட்வொர்க் நிற்காது, அதன் வேகம் மட்டும் 64கேபிபிஎஸ் ஆக மாறும்.


மேலும் படிக்க | Amazon Sale 2023; 40% ஆஃபரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்!!... அமேசான் அசத்தல் ஆஃபர்


மற்ற அம்சங்கள் என்ன?
ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், அனைத்து ஜியோ ஆப்ஸிற்கான சந்தாக்களும் இதில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் JioCinema, JioTV, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆப்ஸ் போன்ற ஜியோ தொகுப்பின் பலனையும் பெறுவார்கள். அத்துடன் ஜியோ 5ஜி இயக்கப்பட்ட நகரங்களில் வசிக்கும் பயனர்களுக்கு, நிறுவனம் இந்த திட்டத்துடன் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரையும் வழங்குகிறது. 





ஏர்டெல் vs ஜியோ
ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரூ.749 திட்டமானது, ஏர்டெல்லின் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்துடன் போட்டியிடுகிறது.  ஏர்டெல் வழங்கும் இந்த திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் இருப்பினும் இதன் விலை சற்று அதிகம்.  இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இலவச விங்க் மியூசிக் , இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல வசதிகள் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | Realme 9: ரூ.1999-க்கு பக்கா கேமரா குவாலிட்டியுடன் ரியல்மீ ஸ்மார்ட்போன்! செம ஆஃபர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ