Realme 9: ரூ.1999-க்கு பக்கா கேமரா குவாலிட்டியுடன் ரியல்மீ ஸ்மார்ட்போன்! செம ஆஃபர்

Realme 9: நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், Realme 9-ஐ ரூ.1,999க்கு வாங்கலாம். அருமையான இந்த ஆஃபர் இப்போது மிஸ் செய்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் கிடைப்பது கடினம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 9, 2023, 04:18 PM IST
Realme 9: ரூ.1999-க்கு பக்கா கேமரா குவாலிட்டியுடன் ரியல்மீ  ஸ்மார்ட்போன்! செம ஆஃபர் title=

Realme 9 Price Discount & Offers: நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்களா? ஆம் எனில், மிகப்பெரிய ஆஃபரில் விற்பனைக்கு வந்திருக்கும் ரியல்மீ 9 ஸ்மார்ட்போனை வாங்குவது பற்றி யோசியுங்கள். இயர்பட்களின் விலையில் அந்த நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனை வாங்கலாம். இப்போது Realme 9 ஸ்மார்ட்போன் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

ரியல்மீ 9 போனின் விலை 21 ஆயிரம் ரூபாய் என்றாலும், சலுகைகளின் கீழ் மிக குறைவான விலையில் வாங்க வாய்ப்பு உள்ளது. அதாவது, நீங்கள் ஒரு புதிய ஃபோனை வாங்க விரும்பினால், உங்கள் பட்ஜெட் 5000 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், இந்த மொபைலை வாங்குவது பற்றி தாராளமாக யோசிக்கலாம். பல்வேறு சலுகைகளுக்குப் பிறகு, ரூ.1,999-க்கு நீங்கள் மொபைலை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இங்கே, ரூ.21,000 மதிப்பிலான மொபைலை மிக குறைந்த விலைக்கு வாங்குவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ரூ 699 ரீசார்ஜ் பிளான்..130 நாட்கள் வேலிடிட்டி..பிஎஸ்என்எல் அசத்தல்

Realme 9 தள்ளுபடி சலுகை

Realme 9 ஸ்மார்ட்போன் Flipkart-ல் மலிவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.20,999. ஆனால் இது பிளிப்கார்ட்டில் ரூ.13,999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அதன் விலையில் 33 சதவீதம் வரை மொத்த தள்ளுபடி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு தள்ளுபடியை நீங்கள் தவறவிட்டுவிட வேண்டாம்.

realme 9 எக்ஸ்சேஞ்ச் சலுகை

Realme 9-க்கு Flipkart-ல் 12,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. சமீபத்திய மாடல் பட்டியலில் வரும் நல்ல நிலையில் உள்ள போனை மாற்றினால், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறலாம். இத்தகைய சூழ்நிலையில், Realme 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999க்கு பதிலாக ரூ.1,999 மட்டுமே.

Realme 9 மற்ற சலுகைகள்

இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்கான ஃபோன் உங்களிடம் இல்லையென்றால் அல்லது முழு எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியைப் பெற முடியவில்லை என்றால், நீங்கள் மற்ற சலுகைகளைத் தேர்வுசெய்யலாம். Paytm Wallet மூலம் பணம் செலுத்துவதன் மூலம் 100 ரூபாய் உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர, நீங்கள் விரும்பினால், EMI விருப்பத்துடன் தொலைபேசியை வாங்கலாம். ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.334 தவணை செலுத்தினால் போதும்.

மேலும் படிக்க | 2023இல் இந்தியாவை மிரட்ட இருக்கும் மின்சார கார்கள்... இனி இதுக்குதான் மவுஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News