Jio Users good news: ஜியோ பயனர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. ரிலயன்ஸ் ஜியோ ஏற்கனவே பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது ஜியோ பயனர்களுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இனி Jio பயனர்கள் (Jio Users) WhatsApp மூலம் தங்கள் மொபைலை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இது மட்டுமல்லாமல், Jio பயனர்கள் தங்கள் அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் கோவிட் தடுப்பூசி கிடைப்பது பற்றிய தகவல்களையும் பெற முடியும். ஜியோ இந்த சேவையை வாட்ஸ்அப் சாட்போட் மூலம் தொடங்கியுள்ளது. இது குறித்து நிறுவனம், "இப்போது ஜியோ பயனர்கள் பில்களை செலுத்துவது, எங்களிடம் கேள்விகளை கேட்பது, புகார் அளிப்பது ஆகியவற்றைத் தவிர வாட்ஸ்அப்பின் உதவியுடன் சாட்போட்டில் பல சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்." என்று தெரிவித்துள்ளது.


WhatsApp-பிலேயே புதிய Jio SIM-ஐ ஆர்டர் செய்யலாம்


நிறுவனத்தின் இந்த புதிய சேவையைப் பயன்படுத்தி, பயனர்கள் புதிய ஜியோ சிம்மையும் ஆர்டர் செய்யலாம். WhatsApp-பில் பயனர்களுக்கு Jio SIM ஆதரவு, ஜியோ ஃபைபர், சர்வதேச ரோமிங் மற்றும் ஜியோ மார்ட் தொடர்பான சேவைகளை நிறுவனம் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக, இப்போது பயனர்கள் ஜியோ சிம் மூலம் ஜியோ மொபிலிட்டி, ஃபைபர் மற்றும் ஜியோ மார்ட் கணக்கை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.


ALSO READ: Airtel XStream vs Jio Fiber broadband plans: எந்த பிளான் பெஸ்ட்


WhatsApp-பில் 'Hi' என டைப் செய்து செய்தி அனுப்ப வேண்டும்


இ-வாலட், யுபிஐ (UPI), கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் போன்ற கட்டண விருப்பங்களுக்கு, ஜியோ பயனர்கள் 'Hi' என்று டைப் செய்து 70007 70007 க்குWhatsApp செய்தியை அனுப்பலாம். இப்போது நிறுவனம் புதிய அம்சத்தை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் வழங்கி வருகிறது. விரைவில் இந்த சேவை பிற மொழிகளிலும் கிடைக்கும்.


இந்தி மற்றும் ஆங்கில மொழியில் சேட் ஆப்ஷன் கிடைக்கும் 


இந்த புதிய சேவையில் பயனர்களுக்கு மொழியை மாற்றுவதற்கான விருப்பத்தையும் ஜியோ வழங்கியுள்ளது. நீங்கள் சாட்போட்டின் மொழியை மாற்ற விரும்பினால், சேட் மொழியை மாற்றுவதற்கான ஆப்ஷனை  (change chat language) கிளிக் செய்யவும். உங்கள் வசதிக்கு ஏற்ப இந்தி அல்லது ஆங்கிலத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். எதிர்காலத்தில் இந்த சேவையில் பிற மொழிகளும் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.


ALSO READ: Jio Phone good news: இனி மிகக்குறைந்த விலையில் இந்த மலிவு விலை போனிலும் WhatsApp Calling செய்யலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR