ஜியோ vs ஏர்டெல்: பெஸ்ட் 5ஜி பிளான்கள்
ஜியோ மிக குறைந்த விலையில் 5ஜி பிளான்களை அறிமுகப்படுத்தியிருப்பதால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அதிக விலை கொடுத்து 5ஜி பிளானை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
டெலிகாம் துறையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. இதில் ஜியோ 5ஜி துறையில் அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருகிறது. அதற்கேற்ப ஏர்டெல் நிறுவனமும் 5ஜி திட்டங்களையும் அடிப்படை கட்டமைப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் 5ஜி பிளான்களை கொண்டு வந்திருக்கிறது. 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான்களில் எல்லாம் ஜியோ 5ஜி அறிமுகப்படுத்தியிருப்பதால், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இது ஷாக்கை கொடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவன பிளானுடன் ஒப்பிடும்போது ஜியோ வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையுடன் கூடுதல் சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள்.
ஜியோவின் 5ஜி பிளான்கள்
ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு வகைகளில் வரும் 56 நாட்கள் செல்லுபடியாகும் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களில் ரூ.533, ரூ.589, ரூ.479 மற்றும் ரூ.529 என்ற விலையில் வாடிக்கையாளர்கள் ஜியோவின் 5ஜி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன் கூடுதலாக நாள் ஒன்றுக்கு அன்லிமிட்டெட் காலிங், 100 எஸ்எம்எஸ் மற்றும் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவையும் உபயோகித்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரயில் கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை புக் செய்யலாம், எப்படி? உடனே படியுங்கள்
ஏர்டெல் 5ஜி பிளான்கள்
ஏர்டெல் 5ஜிக்கான பிரீமியம் சலுகைத் திட்டங்கள் இன்னும் சோதிக்கப்படவில்லை என்றாலும், 4ஜி நெட்வொர்க்கில் அவர்கள் 5ஜி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோவுடன் ஒப்பிடும்போது மிக அதிக விலையிலான திட்டங்களில் மட்டுமே 5ஜி சேவையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. ஜியோ கொடுக்கும் அம்சங்களை கணக்கில் கொள்ளும்போது குறைந்தபட்சம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கிறது. கூடுதல் தொகை கொடுத்தாலும் வேலிடிட்டி மற்றும் டவர் பிரச்சனைகளும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது.
இது இணைய உபயோகத்திலும் எதிரொலிக்கிறது. இதனால் ஜியோவுக்கு மாறிக் கொள்ளலாமா? என்றும் சில வாடிக்கையாளர்கள் யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டங்களைக் கருத்தில் கொண்டு விரைவில் ஏர்டெல் நிறுவனமும் அதற்கு இணையான பிளான்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க | ரயில் கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை புக் செய்யலாம், எப்படி? உடனே படியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ