புது டெல்லி: கொரோனா காலத்தில், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான மலிவான திட்டங்களை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. இந்த திட்டங்களில், DATA முதல் தொடங்கி காலிங்க, மெசேஜ் என பல வகையான நன்மைகள் வழங்கப்படுகின்றன. ஒருபுறம், Jio ரூ .98 மலிவான திட்டத்துடன் சந்தையில் ஒரு பரபரப்பை உருவாக்கியது, மறுபுறம் BSNL ரூ .97 திட்டத்தில் பல்வேறு சிறப்பு பரிசுகளை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ ரூ 98 திட்டம்
கொரோன ஊரங்கு காரணமாக டெலிகாம் (Telecom) நிறுவனங்கள் அவ்வபோது புதிய மலிவான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். ஊரடங்கு விதிக்கபட்டு உள்ளதால் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டெலிகாம் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளையும், இலவசங்களையும் அள்ளி வீசி வருகின்றன.


ALSO READ | BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு Good News, இந்த திட்டங்களில் புதிய மாற்றம்


அந்தவகையில், ஜியோ (Jio) நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேரக்கூடிய 98 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்தை புதிய வடிவில் கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த அந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. தற்போது வேலிடிட்டி, இலவச சேவை, இண்டர்நெட் அளவு ஆகியவற்றில் ஒரு சில மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. 98 ரூபாய் திட்டமானது 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள், ஜியோ நிறுவன செயலிகளான JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகிய ஆப்களையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி மக்களும் 98 ரூபாய் ஜியோ திட்டத்தை ரீச்சார்ஜ் செய்து கொள்ள முடியும். 


பி.எஸ்.என்.எல் ரூ .97 திட்டம்
பிஎஸ்என்எல் (BSNL) ரூ 97 வவுச்சர் திட்டத்தில் 18 நாட்களுக்கு வரம்பற்ற இலவச இணையசேவை கிடைக்கிறது. இதில் சந்தாதாரர்களுக்கு தினசரி 2 ஜிபி அதிவேக இணையசேவை தரவு கிடைக்கும். அதன் பிறகு இன்டெர்நெட் வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளையும் பெறுவீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR