புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோ 3 புதிய போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் ஜியோஃபை 4ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் இலவசமாகக் கிடைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டங்களின் விலை ரூ.249ல் தொடங்கி ரூ.349 வரை இருக்கும். இந்த மூன்று திட்டங்களிலும் 1 மாதம் வரை செல்லுபடியாகுபவை என்பது குறிப்பிடத்தக்கது.


JioFi இன் இந்த புதிய போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.349 என மூன்று வகையில் இருக்கிறது. இந்த அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும், 30 நாட்கள் மட்டுமே வேலிடிடி இருக்கும்.


ஜியோஃபை (JioFi) புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது


ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்திய 3 போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வாங்குபவர்களுக்கு JioFi 4G வயர்லெஸ் போர்ட்டபிள் ஹாட்ஸ்பாட்டை இலவசமாக வழங்குகிறது. இருப்பினும், இந்த சாதனம் திரும்பித் தரும் அடிப்படையில் கொடுக்கப்படும்.


புதிய திட்டங்களின் பலன்கள்
ரூ.249 திட்டத்தில், பயனர்கள் 1 மாதம் வரை செல்லுபடியாகும் 30ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். 299 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 40ஜிபி டேட்டா கிடைக்கிறது. ரூ.349 திட்டத்தில் 50ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.


இந்தத் திட்டங்கள் அனைத்தும் 1 மாத வேலிடிட்டியுடன் வருகின்றன, இதில் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில் குரல் அழைப்பு மற்றும் SMS எனப்படும் குறுஞ்செய்திகள் கிடைக்காது. இந்த மூன்று திட்டங்களும் 18 மாத லாக்-இன் காலத்துடன் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ரூ. 30,000 லேட்டஸ்ட் போன் ரூ.9,499-க்கு: அசத்தும் பிளிப்கார்ட்


JioFi அம்சங்கள் விவரக்குறிப்புகள்
சாதனத்தை இணைக்கவேண்டும் 10 (வைஃபை) + 1 (யூஎஸ்பி டெதரிங்)


நிலையான WAN: LTE (2300 / 1800 / 850 MHz), IEEE 802.11b/g/n 2.4G மட்டும்


பவர் சப்ளை AC: 100-240V; DC: 5V&1A


பரிமாணங்கள் - 85 X 55 X 16 மிமீ


மைக்ரோ-எஸ்டி கார்டு, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட், நானோ சிம்


பேட்டரி திறன் - 2300mAh


மேலும் படிக்க | லேப்டாப்பின் பேட்டரி ஆயுளை அதிகரிப்பது இவ்வளவு சுலபமா?


JioFi என்பது ஒரு சிறிய வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் சாதனமாகும், இது 150Mbps வரை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை வழங்குகிறது.


ஒரே நேரத்தில் 10 சாதனங்களுடன் இணைக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இது தவிர, இதன் பேட்டரி 2300mAh திறன் கொண்டது. இது 5 முதல் 6 மணிநேர உலாவல் அனுபவத்தை எளிதாக வழங்குகிறது. இந்த சாதனத்தின் பரிமாணங்கள் 85x55x16 மிமீ ஆகும்.



ஜியோ திட்டங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும்
ஜியோ விரைவில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரிக்கலாம். சந்தையை உன்னிப்பாக கவனித்து வரும் நிபுணர்களின் கணிப்பின்படி, தீபாவளியன்று ஜியோ, ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணங்களை மீண்டும் அதிகரிக்கலாம்.


கடந்த ஆண்டு டிசம்பரில், ஜியோவுடன் இணைந்து, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை 25 சதவீதம் வரை அதிகரித்தன. இந்த முறை மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் திருத்தப்பட்டன இனி இந்த பலன்கள் கிடையாது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR