பொதுமக்களின் மொபைல் ஆர்வத்தினை தூண்டிய Jio போன் தற்போது Amazon-ல் கிடைக்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று வருடங்களுக்கு 1500 ரூபாய் திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையில் amazon.in -ல் JioPhone இனி கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


சமீபத்திய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு JioPhone சுவாரசியமான அம்சங்கள் நிறைந்து வருகிறது என Jio நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த போன் ஆனது 22 இந்திய மொழிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் குரல் தேடல் வசதியையும் பெற்றுள்ளது. இதனால் HelloJio என்னும் வார்த்தையை உச்சரித்து தங்களது ஸ்மார்ட் தொலைக்காட்சியினை தங்களது போனுடன் இணைக்க இயலும்.


JioPhone ஆனது JioApps, JioMusic, JioCinema உடன் 6000+ திரைப்படம், JioTV உடன் 525 சேனல்கள், JioXpressNews உடன் சொந்த மொழியில் செய்தி வெளியிடுவது என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.


சமீபத்தில், பேஸ்புக் பயன்பாட்டையும் JioPhone தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.


ரூ.49 மட்டும் செலுத்தி ஜியோ வாடிக்கையாளர்கள், 28 நாட்களுக்கு முழு இலவச குரல் அழைப்புகள் மற்றும் டேட்டா அனுபிவிக்கும் வகையில் புது திட்டத்தினையும் இந்த போனுடன் வழங்கியுள்ளது!


அமேசான் மூலம் இந்த போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், ரூ.50 திரும்ப்பெருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமேசான் பே மூலும் ரூ.50 ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 50% வரை பணம் திரும்ப்பபெரும் வசதியையும் ஜியோ வழங்குகிறது. இந்த இரண்டு சலுகைகளும் வரும் பிப்.,28 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது!