Lexus Car: கமல் பரிசளித்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள லெக்சஸ் காரின் ஸ்பெஷல்
லோகேஷ் கனகராஜூக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசாக அளித்திருக்கும் லெக்சஸ் காரின் விலை 75 லட்சம் ரூபாயாம்.
விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் காரை பரிசாக கொடுத்திருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த காரின் பேஸ் வேரியண்டின் விலை 68 லட்சம் ரூபாய் என்றாலும், லக்ஸூரி வேரியண்ட் 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கமல் நிச்சயம் லக்ஸூரி வேரியண்டை தான் பரிசாக கொடுத்திருப்பார்.
மேலும் படிக்க | இந்த SUV கார்களுக்கு அதிக டிமாண்ட், டாப் 10 பட்டியல்
லெக்சஸ் காரின் ஸ்பெஷல்
லெக்சஸ் நிறுவனத்தின் ES300h மாடல் கார் என்ட்ரி லெவல் சொகுசு செடான் கார். இது Exquisite மற்றும் Luxury என இரண்டு வேரியன்ட்களில் உள்ளது. பேஸ் விலை 68 லட்சம் ரூபாய். சொகுசு கார் 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் டச் ஸ்க்ரீன் 12.3 இன்சில் டேப்லெட் போல இருக்கும். ஏரோடைனமிக் டிசைனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கார், விபத்துகளின்போது பெரிய சேதாரம் ஏற்படாமல் இருக்க வலுவான இரும்பைக் கொண்டு தயாரித்திருக்கிறார்கள்.
8.9 விநாடிகளில் 0-வில் இருந்து 100 கி.மீ-யை எட்டும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளிலும் ஓடக்கூடிய இந்தக் காரில் 204 செல்கள் கொண்ட மிகப்பெரிய நிக்கல் ஹைட்ரைடு பேட்டரியுடன் வருகிறது. இந்தக் காரில் ஸ்டார்ட்டிங் ட்ரபுள் ஏற்படாது. 2,487 சிசி – 4 இன்லைன் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினின் பவர், 218 bhp உருவாக்கும்.
பாதுகாப்பு
மைலேஜில் கலக்கும் இந்தக் கார் லிட்டருக்கு 22.6 கிலோ மீட்டர் கொடுக்குமாம். நிறுவனம் இப்படி கூறினாலும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 17 முதல் 20 கி.மீ கொடுக்கிறது என கூறுகிறார்கள். 360 டிகிரி பாதுகாப்பு கேமரா இருக்கிறது. டிரைவர் மற்றும் பயணிகள் என 10 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. வைட் லைட்ஸ் ஹெட்லேம்புகள், வெண்டிலேட்டர் சீட்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கார் வாங்க சரியான நேரம்: ஹுண்டாய் கார்களில் பம்பர் தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR