Auto Tips: இரு சக்கர வாகனங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. வீட்டின் அருகில் உள்ள பணிகளாக இருந்தாலும் சரி, நீண்ட பயணமாக இருந்தாலும் சரி, வாகனத்தின் பிரிவைப் பொறுத்து அது நம் தேவையாகிவிட்டது. இரு சக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்களும் இரு சக்கர வாகனம் வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு சக்கர வாகனங்களை (Two Wheelers) வாங்கும் முன்னர் சில முக்கிய குறிப்புகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் ஸ்கூட்டர் வாங்கினாலும், மோட்டர் சைக்கிள் வாங்கினாலும், இந்த குறிப்புகளை மனதில் கொண்டால், உங்கள் தேவைக்கு ஏற்ப இரு சக்கர வாகனத்தை சிறந்த முறையில் வாங்க முடியும்.


வாகனத்தை யார் பயன்படுத்தப்போகிறார்கள்? 


இரு சக்கர வாகனம் வாங்க திட்டமிடும்போது, அதை யார் இயக்கப்போகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஆண் அதை பயன்படுத்துவதாக இருந்தால், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டி இரண்டிலிருந்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஒரு பெண் அதை பயன்படுத்துவதாக இருந்தால், வடிவமைப்பின் படி, ஸ்கூட்டர் (Scooter) பெண்களுக்கு மிகவும் வசதியான வாகனமாக இருக்கும்.


வாங்குவதன் நோக்கம்?


இரு சக்கர வாகனம் வாங்கும் போது, ​​அதன் நோக்கம் பற்றியும் தெளிவாக இருக்க வேண்டும். அதன் பயன்பாடு எந்த வகையில் இருக்கும் என்பதை நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் இருக்கும் பணிகளுக்கு இரு சக்கர வாகனம் தேவைப்படுகிறது என்றால், ஸ்கூட்டர் அதற்கு சிறந்ததாக இருக்கும். அலுவலகம் சென்று வரவும் ஸ்கூட்டர்கள் சிறந்த வாகனமாக இருக்கும். எனினும், நீண்ட தூர பயணங்கள் செல்லவோ, மலைபிரதேசங்களில் பயணிக்கவோ, இப்படிப்பட்ட பணிகளுக்கு உங்களுக்கு வாகனம் தேவைப்பட்டால், அதற்கு நல்ல மோட்டார் எஞ்சின் கொண்ட மோட்டார்சைக்கிளை வாங்க வேண்டும். 


ALSO READ | Bike Maintenance: குளிர் காலத்தில் பைக் ஓட்ட உதவும் சில முக்கிய குறிப்புகள்


மைலேஜ் மற்றும் அம்சங்கள்


நீங்கள் வாங்க திட்டமிடும் இரு சக்கர வாகனத்தின் மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை நீங்கள் சேகரிக்க வேண்டும். இந்த நாட்களில் இணையத்தில் பல தகவல்கள் கிடைக்கின்றன. நீங்கள் எந்த ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் (Motorcycle) வாங்க விரும்பினாலும், முதலில் அதைப் பற்றி ஆன்லைனில் படிக்கவும், நிபுணர்களிடம் பேசி புரிந்துகொள்ளவும். அதன் பிறகு, நீங்கள் டீலரிடம் செல்லும்போது, ​​டீலரிடமிருந்தும் அதைப் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள். 


பட்ஜெட் மற்றும் விலை


எந்தவொரு வாகனத்தையும் வாங்குவதற்கு முன், உங்கள் பட்ஜெட்டையும் அந்த வாகனத்தின் விலையையும் பொருத்திப் பார்க்க வேண்டும். அதன் விலை உங்கள் பட்ஜெட்டில் பொருந்துகிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பட்ஜெட்டுக்கு மேல் செலவிட்டு நீங்கள் மோட்டார் சைக்கிள் வாங்கினால், அதுவே உங்கள் சுமையாக அமையலாம். ஆகையால் அதிலும் கவனம் இருப்பது மிக அவசியம். 


ALSO READ | புத்தாண்டில் மற்றொரு ஷாக்: Bajaj Auto பைக்குகளின் விலை உயர்கிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR