528 கி.மீ மைலேஜ் கொடுக்கும் கியா காரின் சிறப்பம்சங்கள்
5 நொடியில் 100 கி.மீ எட்டும் கியா எலக்டிரிக் கார், 528 கி.மீ மைலேஜ் கொடுக்குமாம்
அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், உங்களுக்கு அசத்தலான கார் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஆம். கியா EV6 கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் 528 கி.மீ வரை இயக்க முடியும். பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தைக் கொண்டிருக்கும் இந்தக் கார், சார்ஜ் செய்ய ஆரம்பித்தவுடன் 10 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை 40 நிமிடங்களில் ரீசார்ஜ் செய்ய முடியும்.
கியா இவி6 மின்சார கார் GT RWD மற்றும் AWD ஆகிய இரண்டு வகைகளில் வந்துள்ளது. கியாவின் எலெக்ட்ரிக்-குளோபல் மாடுலர் பிளாட்ஃபார்ம் (இ-ஜிஎம்பி) அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார் இதுவாகும். இந்த காரில் பல பாடி ஸ்டைல்கள் மற்றும் கேபின் லேஅவுட்கள் உள்ளன. மார்க்கெட்டில் புதிய கியா கார் 100 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார்களில் CBU வழியாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இந்தியாவிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா இவி6 கார், இங்கு முழுவதும் முன்பதிவு செய்யப்படுவிட்டதாக தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட கார்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டெலிவரி கொடுக்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பல சிறப்பம்சங்களைக் கொண்ட கியா காரின் விலை தான் மலைக்க வைக்கிறது.
மேலும் படிக்க | ரூ. 6 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான 7 சீட்டர் கார்கள்
கியா EV6 விலை
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் Kia EV6 மாடல் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59.95 லட்சம்.
Kia EV6 சிறப்பம்சங்கள்
Kia EV6 இரண்டு வகைகளில் வரும். இந்த காரில் 77.4 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. வரம்பைப் பொறுத்தவரை, Kia EV6 ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் 528 கிமீ வரை செல்ல முடியும். நிறுவனம் இத்தகைய தகவலைக் கூறினாலும், அதிகாரப்பூர்வ வரம்பு பற்றி எதுவும் கூறப்படவில்லை. ஏற்கனவே கூறப்பட்டதுபோல் சார்ஜ் செய்யத் தொடங்கிய நேரத்தில் இருந்து EV6 காரின் பேட்டரி 10 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆக வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். மேலும், 5.2 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
Kia EV6 சொகுசு கார் ஸ்பெஷல்
கியா EV6 எலக்ட்ரிக் கார் பல சொகுசு கார் மாடல்களுடன் போட்டியிடக்கூடிய சமீபத்திய அம்சங்களைக் கொண்டுள்ளது. கார் முக்கிய இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவர் டிஸ்பிளேவுக்காக HD டிஸ்ப்ளே திரையைக் கொண்டுள்ளது. பிரபலமான பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. பலவிதமான சார்ஜிங் விருப்பங்களும் இருக்கின்றன.
மேலும் படிக்க | ரூ.149 திட்டத்தில் 1 GB கொடுக்கும் ஜியோ - ஏர்டெல் கலக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR