ரூ.149 திட்டத்தில் 1 GB கொடுக்கும் ஜியோ - ஏர்டெல் கலக்கம்

ஜியோ நிறுவனம் கொடுத்துள்ள 149 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா திட்டத்தால் ஏர்டெல் நிறுவனம் கலக்கமடைந்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 13, 2022, 12:33 PM IST
  • குறைவான விலையில் ஜியோ பிளான்
  • புதிய திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் கலக்கம்
  • ரூ.149 திட்டத்தில் 1 ஜிபி டேட்டா கிடைக்கும்
ரூ.149 திட்டத்தில் 1 GB கொடுக்கும் ஜியோ - ஏர்டெல் கலக்கம் title=

குறைந்த விலையில் ப்ரீப்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி, போட்டி நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஜியோ நிறுவனம், புதியதாக இன்னொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், டெலிகாம் துறையில் இருக்கும் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள் குறைந்த விலையில் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், ரூ.150க்கும் குறைவான விலையில் ஏற்கனவே இருக்கும் திட்டங்களைக்போல் மற்றொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | குறைந்த விலையில் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு
 
ஜியோவின் ரூ.149 திட்டம்

ஜியோவின் ரூ.149 திட்டம் புதியதாக அறிமுகப்படுதப்பட்டுள்ளது. 20 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் யூசர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். அதாவது, இந்தத் திட்டத்தில் மொத்தம் 20 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இது தவிர, எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 SMS தினமும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் ஜியோ ஆப்ஸ் அணுகலும் கிடைக்கிறது.

ஜியோவின் ரூ.152 திட்டம்

ஜியோவின் இந்த திட்டம் ஜியோ போன் யூசர்களுக்கானது. ரூ.152 திட்டத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், யூசர்கள் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார். அதாவது, திட்டத்தில் மொத்தம் 14 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் ஜியோ ஆப்ஸ் அணுகலும் கிடைக்கிறது.

ஜியோவின் ரூ.179 திட்டம்

ஜியோவின் ரூ.179 திட்டத்தில் 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில், யூசர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார். அதாவது, இந்த திட்டத்தில் மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 SMS தினமும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் ஜியோ ஆப்ஸ் அணுகலும் கிடைக்கிறது.

மேலும் படிக்க | Motorola Moto G60: 3,499 ரூபாய்க்கு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News