இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தனர். இந்த நடவடிக்கை மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, புத்துநீர் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம். ஏனெனில் இதனால், பல வாடிக்கையாளர்கள் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஸ்என்எல் இந்த வாய்ப்பை தவற விடாமல், அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, தனது 4G சேவைகளை நாட்டில் வேகமாக விரிவுபடுத்துகிறது. சமீபத்தில், BSNL தனது சொந்தமாக உள்ள 15,000+ 4ஜி நெட்வொர்க் டவர்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதோடு, அடுத்த ஆண்டு 5G சேவைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கை, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றுக்கு சிறிது பதற்றத்தை கொடுத்துள்ளது.


கடந்த ஜூலை மாதத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் மிக அதிக அளவாக, 2.17 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்தன் மூலம் நிறுவனம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இதனால், மாநிலத்தில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்டியுள்ளது. பிஎஸ்என்எல் சிம் பெற விரும்புபவர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு செல்வதன் மூலம் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம். பின்னர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களின் புதிய சிம்மை தாங்களே ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | பிராட்பேண்ட் சேவையில் அதிரடி காட்டும் BSNL... 399 ரூபாயில் 3300 GB டேட்டா...!


புதிய BSNL வாடிக்கையாளராக இருக்கும் நிலையில், உங்கள் BSNL சிம்மை ஆக்டிவேட் செய்யும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்


1. உங்கள் ஸ்மார்ட்போனில் உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டைச் செருகி, மொபைலை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.


2. நெட்வொர்க் சிக்னல் வரும் வரை காத்திருங்கள்.


3. ஸ்மார்ட்ஃபோன் திரையின் மேற்புறத்தில் நெட்வொர்க் சிக்னலைப் பார்த்தால், ஃபோனில் உள்ள செயலியை திறக்கவும்.


4. உங்கள் தொலைபேசியிலிருந்து 1507 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.


5. உங்கள் மொழி, அடையாளம் மற்றும் முகவரி பற்றி உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்


6. டெலி முறையில் தகவல்கள் சரிபார்ப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.


7. செயல்முறை நிறைவடைந்த பின், உங்கள் BSNL சிம் ஆக்டிவேட் ஆகும்.


8. உங்கள் மொபைலுக்கான குறிப்பிட்ட இணைய அமைப்புகளைப் பெறுவீர்கள்.


9. உங்கள் BSNL சிம் கார்டு சரியாக வேலை செய்ய இந்த அமைப்புகளைச் சேமிக்கவும்.


10. இப்போது நீங்கள் உங்கள் BSNL சிம் கார்டில் இருந்து அழைப்புகள் செய்யலாம் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தலாம்.


மேலும் படிக்க | BSNL 5G Service: 5ஜி சேவையை தொடங்க தயாராகும் பிஎஸ்என்எல்... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ