BSNL 5G Service: 5ஜி சேவையை தொடங்க தயாராகும் பிஎஸ்என்எல்... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!!

BSNL 5G Service: தனியார் தொடை தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, புத்துநீர் பெரும் வாய்ப்பை கொடுத்துள்ளது என்றால் மிகை இல்லை. மிகவும் மலிவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி, அதிக அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

பிஎஸ்என்எல் கடும் போட்டியாளராக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், ஜியோ நிறுவனம், புதிய ரீசார்ஜ் திட்டங்கள், சலுகைகள், புதிய போன் அறிமுகம் என்று பல்வேறு வகையில் வாடிக்கையாளர்களுக்கு முயற்சி செய்து வருகிறது.

1 /8

பிஎஸ்என்எல் சிம்மிற்கு மாறும் வாடிக்கையாளர்கள்: ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியதால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் பலர் பிஎஸ்என்எல் சிம்மிற்கு மாறி வருகின்றனர்.

2 /8

திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 19 கிராமங்களுக்கு 4ஜி சேவையை வழங்கியது . கூடிய விரைவில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 /8

BSNL 5G சேவை: ஜியோ மற்றும் ஏர்டெல் ஆதிக்கம் செலுத்தும் தொலைதொடர்பு 5ஜி சேவை சந்தையில், அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் தனது 5G சேவைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாக அறிவித்த நிலையில், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.

4 /8

5ஜி சேவை சோதனை நடத்தப்படும் நகரங்கள்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சோதனை டெல்லி, பெங்களூரு , ஹைதராபாத், சென்னை போன்ற பெரிய நகரங்களில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5 /8

BSNL 5G பரிசோதனை: BSNL 5G பரிசோதனையை மேற்கொள்ள, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், லேகா வயர்லெஸ் மற்றும் அமந்தியா டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல முக்கிய இந்திய நிறுவனங்களிடமிருந்து  ஆலோசனைகளை பெற்றுள்ளது.  

6 /8

BSNL 5G சேவை: அரசுக்கு சொந்தமான BSNL அதன் 5G சேவைகளை தொடங்க பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் பிற  கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இந்த முயற்சி, தனியார் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும் என வல்லுநர்கள் தெர்விக்கின்றனர்.  

7 /8

டாடாவின் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு: டாடா நிறுவனம் இப்போது பிஎஸ்என்எல் உடன் இணைந்து, தொலைத்தொடர்பு துறையில் மீண்டும் வலுவாக தனது காலகள் பதிக்க திட்டமிட்டு வருகிறது. அரசு தொலைதொடர்பு நிறுவனத்தை, தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் மேம்படுத்த டாடா நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

8 /8

பிஎஸ்என்எல் சிம் கார்டு விற்பனை: கட்டண உயர்வுக்கு பிறகு ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மட்டும் கடந்த 20 நாட்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.